பூமியில் இருந்து 72 ஒளி ஆண்டுகள் தொலைவில் M என்ற சிறிய நட்சத்திரத்தை சுற்றி வரும் K2-415b என்ற பூமி அளவிலான எக்ஸோ ப்ளானெட் இருப்பதை வானியலாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. K2-415b கிரகம் பூமியுடன் நிறைய ஒற்றுமைகளை கொண்டுள்ளது எனவும் கூறியுள்ளனர்.
ஜப்பானில் உள்ள ஆஸ்ட்ரோபயாலஜி மையத்தைச் சேர்ந்த டெருயுகி ஹிரானோ தலைமையிலான சர்வதேச வானியலாளர்கள் குழு, எம் என்ற சிறிய நட்சத்திரத்தை சுற்றி சிறிய கிரகங்கள், பாறைக் கோள்கள், வளிமண்டல பன்முகத்தன்மை மற்றும் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறு ஆகியவைகளை ஆராய்ந்தனர்.
அப்போது K2-415b என்ற பூமி அளவிலான எக்ஸோ ப்ளானெட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு சுவாரஸ்யமான இலக்காக இருக்கும். இனி வரும் ஆராய்ச்சிகளுக்கும் இது உதவும் என்றனர்.
எக்ஸோ ப்ளானெட் பூமி அளவில் இருப்பதையும், பூமிக்கு மிக அருகில் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இருப்பினும், இது மிக அதிக எடை கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸோ ப்ளானெட் அதன் சுற்றுப்பாதையை சுற்றி வர 4 நாட்கள் ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/