சூரிய குடும்பத்தில் உள்ள 7 கோள்களையும் வரும் பிப்ரவரி 28-ந் தேதி முதல் ஒரே நேர்கோட்டில் பார்க்க முடியும் என்று அமெரிக்க வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது,
வானில் சூரிய குடும்பத்தில் உள்ள 9 கோள்களும் சூரியனை மையமாக வைத்து நீள் வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. இந்த கிரகங்கள் சூரியணை சுற்றும்போது, நாம் பார்க்கும்போது, ஒரே திசையில் காட்சியளிக்கும். அந்த வகையில், சூரிய குடும்பத்தில் உள்ள, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், உள்ளிட்ட 7 கிரகங்களின் அணிவகுப்பு வரும் பிப்ரவரி 28-ந் தேதி முதல் ஒரே நேர்க்கோட்டில் பார்க்க முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.
பல கிரகங்கள் ஒரே நேரத்தில், சூரியனின், ஒரே பக்கத்தில் வரும்போது கிரகங்கள் அணிவகுப்பு என்பது நடக்கிறது. இந்த கிரகங்களின் அணிவகுப்பு பிப்ரவரி 28-ந் தேதி தொடங்கினாலும் மார்ச் 3-ந் தேதி தான் இந்தியாவில் பார்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி உள்ளிட்ட கிரகங்களை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கிரகங்களை பைனாக்குலர் மற்றும் தொலைநோக்கி உதவியுடன் பார்க்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கிரகங்கள் அணிவகுப்பு தொடர்பான இந்த அரிய நிகழ்வை பார்ப்பதற்காக, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு விண்வெளி ஆர்வலர் கழகம் சார்பில், தொலைநோக்கி மூலம் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மார்ச் மாதம் முதல் இரண்டு வாரங்களில் இருந்து இந்த கிரகங்கள் அணிவகுப்புநிகழ்வை பார்க்கலாம் என கூறியுள்ள அறிவியலர்கள், 2025-ல் பார்க்கவில்லை என்றால், அடுத்து 2040ல் தான் 7 கிரக அணிவகுப்பு பார்க்க முடியும் என கூறியுள்ளனர்.
இந்த நிகழ்வை மறுபடியும் காண 15 ஆண்டுகள் ஆகும் என்பதால், அறிவியல் ஆர்வலர்கள் அறிவியல் ஆர்வம் கொண்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த நிகழ்வை காண்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும், பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று ஏழு கிரக அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்க்க வாய்ப்புள்ளதாகவும் அறிவியல் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.