/tamil-ie/media/media_files/uploads/2023/05/New-Project25.jpg)
Supernova
இயற்கை தினம் தினம் பல்வேறு அதிசயங்களை கொடுக்கிறது. அதைப் பற்றிய ஆய்வு தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் வானில் சூப்பர்நோவா நிகழ்ந்ததை வானியற்பியலாளர் ஒருவர் படம் பிடித்துள்ளார்.
வானில் உள்ள பின்வீல் விண்மீன் மண்டலத்தை நோக்கி தனது தொலைநோக்கியைத் திருப்பியபோது, இதேபோன்ற நிகழ்வை வானியற்பியல் நிபுணர் ஆண்ட்ரூ மெக்கார்த்தி படம்பிடித்தார். அதில், ஒரு நட்சத்திரம் வெடித்து மறைவது படம் பிடிக்கப்பட்டுள்ளது.
VERY windy tonight, so the photo of the supernova isn't very good. I'll keep shooting it, and have a nice polished image of the galaxy WITH the supernova soon! It will look something like this: pic.twitter.com/nocpmMVoka
— Andrew McCarthy (@AJamesMcCarthy) May 20, 2023
விண்மீன் மண்டலத்தின் மேல் பகுதியில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. சூப்பர்நோவா என்பது பூமியில் இருந்து கவனிக்கப்படும் மிகப்பெரிய வெடிப்பாகும், மேலும் ஒரு நட்சத்திரம் நமது சூரியனை விட ஐந்து மடங்கு எடை கொண்ட எரிபொருள் தீரும் போது இந்த நிகழ்வு நடக்கிறது.
நட்சத்திரம் அதன் ஆயுட்காலத்தை நெருங்கி எரிபொருள் தீரும் போது இந்த பாரிய வெடிப்புகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.