கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சூரிய ஒளி மற்றும் நீரிலிருந்து சுத்தமான எரிபொருளை உருவாக்கும் மிக மெல்லிய, "செயற்கை இலைகளை" உருவாக்கியுள்ளனர். தாவரங்கள் photosynthesis மூலம் சூரிய ஒளியை உணவாக மாற்றுகின்றனர். இதை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இவை மிதக்கும் அளவுக்கு இலகுவான தன்னாட்சி சாதனங்கள் என்பதால், பெட்ரோலுக்கு நிலையான மாற்றாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.
Advertisment
பல்கலைக்கழக அறிக்கையின்படி, நீரில் சுத்தமான எரிபொருள் உருவாக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இந்த தொழில்நுட்பம் மாசடைந்த நீர்வழிகள், துறைமுகங்கள், கடலில் பயன்படுத்தி எரிபொருள் உற்பத்தி செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மெல்லிய இலைகள் போன்ற அந்த பொருளை ஏற்கனவே கேம் ஆற்று வெளியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தாவர இலைகள் போல சூரிய ஒளியை எரிபொருளாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ளன. செயற்கை இலைகள் நீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிக்கிறது அல்லது அல்லது கார்பன் டை ஆக்சைடை சின்காஸ் ஆக குறைக்கிறது. சின்காஸ் (Syngas or synthetic gas ) கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றின் கலவையாகும், இது எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.
Advertisment
Advertisements
காற்று மற்றும் சூரிய ஒளி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்கள் சற்று மலிவானவை மற்றும் எளிதில் கிடைக்ககூடியவை. ஆனால் பல தொழில்களுக்கு, அவை நடைமுறைச் சாத்தியமற்ற தீர்வாகவே இருந்து வருகின்றன. குறிப்பாக கப்பல் போக்குவரத்துத்துறை. உலகளவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வணிகம் சரக்குக் கப்பல் மூலமாக நடைபெறுகின்றன. அவை எரிபொருளை பயன்படுத்துகின்றன. இதற்கு மாற்றாக இந்த தொழில்நுட்பம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஆய்வின் இணை-தலைமை ஆசிரியருமான எர்வின் ரெய்ஸ்னர் மற்றும் அவரது ஆராய்ச்சி குழு பல ஆண்டுகளாக இந்த சிக்கலை தீர்க்க உழைத்து வருகின்றனர். ரெய்ஸ்னரும் அவரது குழுவும் photosynthesis கொள்கை மூலம் பெட்ரோலுக்கு நிலையான தீர்வை உருவாக்குவதில் கவனம் செலுத்தினர். 2019இல் முதல் முறையாக சிங்காஸை உருவாக்கும் செயற்கை இலையை உருவாக்கினர்.
எரிபொருளை உருவாக்கினாலும், சாதனம் பெரிதாக இருந்தது. இந்த பொருளின் செயல்திறன் பாதிக்காத வகையில் பொருளின் அளவை குறைக்க முயன்றோம். அந்தவகையில் மிதக்கும் செயற்கை இலைகள் உருவாக்கப்பட்டது என்றார் ரெய்ஸ்னர்.
"Thin-film metal oxides and “perovskite” பயன்படுத்துவது சவாலாக இருந்தது. செயற்கை இலை போன்ற பொருள் micrometre thin water-repellent கார்பன் அடிப்படையிலான அடுக்குகளால் மூடப்பட்டுள்ளது. ஈரப்பதம் செல்லாமல் இருக்க அது பயன்படுத்தப்பட்டுள்ளது. இறுதியில் உண்மையான இலை போல் தோற்றமளித்தது" என்றார்.
செயற்கை இலைகள் நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோலார் எரிபொருள் உற்பத்திக்கு தொடக்கமாக உள்ளது. சூரிய எரிபொருள் தொழில்நுட்பங்களின் நன்மைகளை ஒருங்கிணைக்கின்றன என்று பல்கலைக்கழக அறிக்கையில் ஆய்வின் ஆசிரியர் விர்ஜில் ஆண்ட்ரே கூறியுள்ளார்.
கடல்வழி, குளம் சார்ந்த பயன்பாடுகளுக்கு இந்த எரிபொருளை பயன்படுத்தலாம் என ஆண்ட்ரே கூறுகிறார். தொழில்துறை குளங்கள் அல்லது நீர்ப்பாசன கால்வாய்கள் ஆவியாகாமல் பாதுகாக்கவும் பயன்படுத்தலாம் எனக் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news