Chandra Grahan - Blood Moon Highlights: சந்திர கிரகணம்: வானில் தோன்றிய ரத்த நிலா

Chandra Grahan Blood Moon Updates: வானியல் நிகழ்வான சந்திர கிரகணம் இன்று நடைபெறுகிறது. இதுதொடர்பான செய்திகளுக்கு இந்த தளத்தில் இணைந்திருங்கள்

Chandra Grahan Blood Moon Updates: வானியல் நிகழ்வான சந்திர கிரகணம் இன்று நடைபெறுகிறது. இதுதொடர்பான செய்திகளுக்கு இந்த தளத்தில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
blood moon 2

அரிய வானியல் நிகழ்வான முழு சந்திர கிரகணம் இன்று (செப்டம்பர் 7) நடைபெறுகிறது. இந்த வானியல் நிகழ்வின்போது சந்திரன் ரத்தம் போன்ற சிவப்பு நிறத்தில் தோன்றும். 

Advertisment

செப்டம்பர் 7 அன்று, இந்திய நேரப்படி இரவு 2:41 மணிக்கு (அமெரிக்க நேரப்படி மாலை 5:11 மணி) சந்திர கிரகணம் அதன் உச்சக்கட்டத்தை அடையும். அதாவது, சந்திரன் முழுமையாக பூமியின் கருநிழலில் மூழ்கிவிடும். இந்த நிலை 82 நிமிடங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்தியாவில் சந்திர கிரகணம் தோன்று நேரம்: மும்பை நேரப்படி (IST): இரவு 11:00 முதல் நள்ளிரவு 12:22 மணி வரை

சந்திரன் பூமியின் புறநிழலில் நுழைவதோடு கிரகணம் தொடங்குகிறது. சந்திரன் மேலும் நகர்ந்து கருநிழலுக்குள் செல்லும்போது, அதன் மேற்பரப்பில் இருண்ட நிழல் படரும். முழுமைநிலை ஏற்படும்போது, சந்திரன் சிவப்பு-ஆரஞ்சு நிறத்தில் தோன்றும். இந்நிறம், கிரகணத்தின் போது பூமியின் வளிமண்டலத்தில் நிலவும் சூழ்நிலைகளைப் பொறுத்தது.

Advertisment
Advertisements

செப்டம்பர் 7-8 அன்று நிகழும் சந்திர கிரகணம், சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும் புள்ளிக்கு 2.7 நாட்களுக்கு முன்பு நிகழ்கிறது. இதனால், சந்திரன் வழக்கமான அளவை விட சற்றே பெரியதாகத் தோன்றும். இது பூமியின் கருநிழல் வழியாக நகரும்போது, செழுமையான மற்றும் அடர் சிவப்பு நிறத்தில் ஒளிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Sep 07, 2025 23:17 IST

    சந்திர கிரகணம்: வானில் தோன்றிய ரத்த நிலா

    சந்திர கிரகணம் தொடங்கியதை அடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக நிலவு மறைந்து, நிலா வானில் ‘ரத்த நிலா’வாக  தோன்றியது. ஒரு எக்ஸ் பயனர், “வானில் தெரியும் ``ரத்த'' நிலா? - உடனே வெளிய போய் பாருங்க மக்களே - வாலாற்றில் அறிய தருணம்!” என்று பதிவிட்டுள்ளார்.



  • Sep 07, 2025 22:43 IST

    சந்திர கிரகணத்தை தெளிவாகப் பார்க்க வழிகள்

    இருண்ட இடத்தைத் தேர்வு செய்யவும்: நகர விளக்குகள் இல்லாத இருண்ட இடத்திற்குச் செல்லவும். இது நிலவை மிகவும் தெளிவாகக் காண உதவும்.

    நேரத்தைத் தெரிந்துகொள்ளவும்: உங்கள் இருப்பிடத்திற்கு ஏற்ற கிரகணம் தொடங்கும், உச்சக்கட்டத்தை அடையும் மற்றும் முடிவடையும் நேரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

    பாதுகாப்பாகப் பார்க்கவும்: சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது பாதுகாப்பானது. எனவே, எந்த சிறப்பு உபகரணமும் தேவையில்லை. பைனாகுலர் அல்லது தொலைநோக்கி மூலம் பார்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    படமெடுக்கவும்: புகைப்படம் எடுக்க, கேமராவை நிலையாக வைத்திருக்க ஒரு முக்காலியைப் (tripod) பயன்படுத்தலாம். மேலும், தெளிவான படங்களுக்கு உங்கள் கேமரா அல்லது போனில் உள்ள புரோ மோட்-ஐப் பயன்படுத்தி, மேனுவல் செட்டிங்ஸில் படமெடுக்கவும்.



  • Sep 07, 2025 22:41 IST

    சந்திர கிரகணம்: கன்னியாகுமரியில் கொஞ்சம் கொஞ்சமாக மறையும் நிலவு

    சந்திர கிரகணம் தொடங்கி நிலவு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. கன்னியாக்குமரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சந்திரகிரகணம் தென்படுகிறது. எக்ஸ் பயனர் ஒருவர் கன்னியாகுமரியில் தக்கலையில் சந்திர கிரகணம் நிகழ்வதை வீடியோ பதிவு செய்து எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



  • Sep 07, 2025 22:35 IST

    பௌர்ணமி நாளில் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் 

    சந்திர கிரகணம் தொடங்கியதால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பௌர்ணமி தினத்திலும் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது பக்தர் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.



  • Sep 07, 2025 22:21 IST

    சென்னையில் சந்திர கிரகணம் தெரிய தொடங்கியது

    சென்னையில் சந்திர கிரகணம் தெரிய தொடங்கியது. முழு சந்திரன் தோன்றியிருந்த நிலையில் தற்பொழுது சந்திரனின் ஒரு பகுதி மறைய தொடங்கி இருக்கிறது. இதனை ஒரு எக்ஸ் பயனர் பதிவிட்டுள்ளார்.



  • Sep 07, 2025 22:19 IST

    அஸ்ஸாம், கவுகாத்தியில் சந்திர கிரகணத்தின் தொடக்க காட்சி

    அஸ்ஸாம், கவுகாத்தியில் முழு சந்திர கிரகணத்தின் பகுதி கிரகணம் தொடங்கியுள்ளது. சந்திர கிரகணம் தொடங்கும் அருமையான காட்சியை ஏ.என்.ஐ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.



  • Sep 07, 2025 22:11 IST

    முழு சந்திர கிரகணம் தொடக்கம்; சிறப்பு ஏற்பாடுகள்

    இந்தியா முழுவதும் முழு சந்திர கிரகணம் நிகழத் தொடங்கியுள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு சந்திர கிரகணம் தெளிவாகத் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணிக்கு முழு கிரகணமாக மாறும் சந்திரன், அடுத்த 3.50 மணி நேரத்திற்கு செந்நிறமாக காட்சியளிக்கும்.

    சந்திர கிரகணத்தைக் காணும் வகையில், சென்னையில் 10 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்கள் இந்த அரிய நிகழ்வை நேரில் கண்டு களிக்கலாம்.



  • Sep 07, 2025 22:07 IST

    சந்திர கிரகணம்: குஜராத்தில் ‘ரத்த நிலவு’ காண சிறப்பு ஏற்பாடு

    குஜராத் அரசு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள குஜராத் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் (GUJCOST) சார்பில், செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் முழு சந்திர கிரகணத்தைக் காண, பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்குச் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    பவன் நகர், புஜ், பதான் மற்றும் ராஜ்கோட் போன்ற இடங்களில் உள்ள பிராந்திய அறிவியல் மையங்களும், மாநிலம் முழுவதும் உள்ள சமூக அறிவியல் மையங்களும் இந்த நிகழ்வை நேரில் காண சிறப்பு ஏற்பாடுகளையும், நிபுணர் உரைகளையும், நேரடி விளக்கங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.



  • Sep 07, 2025 22:04 IST

    மும்பையில் வானம் மேகமூட்டத்துடன் மழை: நிலவைத் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை

    சந்திர கிரகணம் தொடங்கிய நிலையில், மும்பையில் வானம் மேகமூட்டத்துடனும், மழை பெய்தும் காணப்படுவதால், பல பகுதிகளில் இருந்து நிலவை தெளிவாகப் பார்க்க முடியவில்லை.



  • Sep 07, 2025 21:57 IST

    சந்திர கிரகணம்: நாசா எக்ஸ் பக்கத்தில் பதிவு

    நாசா எக்ஸ் பக்கத்தில், “இன்று பௌர்ணமி! ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் வானியல் ஆர்வலர்கள் சந்திர கிரகணம் அல்லது ரத்த நிலவை காணலாம். முழு கிரகணம் இந்திய நேரப்படி இரவு 11:42 மணியளவில் தொடங்கி சுமார் 82 நிமிடங்கள் நீடிக்கும்.’ என்று பதிவிட்டுள்ளது.



  • Sep 07, 2025 21:52 IST

    அடிக்கடி சந்திர கிரகணம் ஏற்படாததற்கு காரணம் என்ன? திவ்யா ஒபரோய் விளக்கம்

    அடிக்கடி சந்திர கிரகணம் ஏற்படாததற்கான காரணத்தை திவ்யா ஒபரோய் விளக்கியுள்ளார். சந்திரனின் சுற்றுப்பாதை, பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து சுமார் 5 டிகிரி சாய்ந்திருப்பதால், ஒவ்வொரு பௌர்ணமி அல்லது அமாவாசை அன்றும் கிரகணம் ஏற்படுவதில்லை.

    நிலவின் மீது பூமியின் நிழல் விழும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்திய வானியல் சங்கத்தின் (ASI) மக்கள் தொடர்பு மற்றும் கல்விக்குழுவின் (POEC) தலைவரும், புனேவில் உள்ள வானொலி வானியலுக்கான தேசிய மையத்தின் இணைப் பேராசிரியருமான திவ்யா ஒபரோய், "பூமியின் இருண்ட நிழல் ‘அம்ப்ரா’ (umbra) என்றும், மங்கலான வெளி நிழல் ‘பெனும்பிரா’ (penumbra) என்றும் அழைக்கப்படுகிறது. சந்திரன் ‘அம்ப்ரா’ பகுதிக்குள் நுழையும்போது பகுதி சந்திர கிரகணத்தை நாம் முதலில் காண்கிறோம்" என்று கூறினார்.



  • Sep 07, 2025 21:12 IST

    சந்திர கிரகணத்தையொட்டி இராமேஸ்வரத்தில் சந்திரனுக்கும், கடலுக்கும் சிறப்பு ஆரத்தி

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் சந்திரனுக்கும், கடலுக்கும் சிறப்பு ஆரத்தி நடைபெற்றது.



  • Sep 07, 2025 21:04 IST

    சந்திர கிரகணம்: ஜோதிட முக்கியத்துவம் என்ன?

    இந்திய ஜோதிடத்தின்படி, சந்திர கிரகணம் (சந்திர கிரகணம்) ஒரு சக்திவாய்ந்த வானியல் நிகழ்வாகக் கருதப்படுகிறது. இது உறவுகள், மன அமைதி மற்றும் ஒட்டுமொத்த உடல்நலம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

    இந்த கிரகணத்தால் ஏற்படும் தீவிரமான ஆற்றல் மாற்றங்கள், ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமாகப் பிரதிபலிக்கும். செப்டம்பர் 2025-இல் நிகழும் இந்த முழு சந்திர கிரகணம், உணர்ச்சிப்பூர்வமான ஏற்றத்தாழ்வுகள், குடும்பத்தில் பதற்றம் அல்லது உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தலாம். இதன் தாக்கம் ஒவ்வொரு ராசிக்குள்ளும் தனித்துவமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.



  • Sep 07, 2025 21:03 IST

    சந்திர கிரகணம்: மும்பை, பெங்களூரு, ஹைதராபாத்தில் சிவப்பு நிலா தோன்றியது

    இந்தியாவில் இன்று இரவு (செப்டம்பர் 7-8) முழு சந்திர கிரகணம் அல்லது சந்திர கிரகணம் தெரியும். இந்த அரிய நிகழ்வில் நிலவு சிவந்த நிறத்தில் "ரத்த நிலவு" போல் காட்சியளிக்கும்.

    டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் இந்த கண்கவர் காட்சியை பார்க்கலாம்.

    கிரகணம் தொடங்கும் நேரம்:

    மாலை 8:58 - பெனும்பிரல் கட்டம் தொடங்குகிறது

    இரவு 9:57 - பகுதி கிரகணம் தொடங்குகிறது

    இரவு 11:42 - முழு சந்திர கிரகணம் தொடங்குகிறது

    நள்ளிரவு 1:26 - கிரகணம் முடிவடைகிறது (செப்டம்பர் 8)



  • Sep 07, 2025 20:58 IST

    பெனும்பிரல் கிரகணம் தொடங்கியது

    இந்த ஆண்டின் அரிய முழு சந்திர கிரகணத்தின், பெனும்பிரல் கிரகணம் தொடங்கியது. பெனும்பிரல் கிரகணம் என்பது, சந்திரன் பூமியின் மங்கலான வெளி நிழலான 'பெனும்பிரா' பகுதி வழியாகச் செல்லும் போது ஏற்படும் ஒரு சந்திர கிரகணம் ஆகும். இதனால், சந்திரன் லேசாக இருட்டாகவும், வெளிச்சம் மங்குவது போலவும் தோன்றும். இது பகுதி அல்லது முழு சந்திர கிரகணத்தைப் போல தெளிவாகத் தெரியாது, சந்திரன் ஓரளவு மட்டுமே மங்கலாக இருக்கும்.  



  • Sep 07, 2025 20:26 IST

    முழு சந்திர கிரகணம்: நிலவு அடர் சிவப்பு நிறத்தில் தோன்றும்

    சென்னையில், 2022-க்குப் பிறகு முதல் முழு சந்திர கிரகணம் இன்று (செப்டம்பர் 7, 2025) நள்ளிரவில் வானில் தோன்றுகிறது. இந்த அரிய நிகழ்வு, நள்ளிரவு 11.01 மணிக்குத் தொடங்கி, திங்கள்கிழமை அதிகாலை 2.25 மணிக்கு முடிவடைகிறது. கிட்டத்தட்ட 82 நிமிடங்கள் நிலவு முழுவதுமாக புவியின் நிழலுக்குள் அடங்கியிருக்கும். இந்த முழு கிரகணத்தின்போது, நிலவு அடர் சிவப்பு நிறத்தில் தோன்றும். இதை மக்கள் வெறும் கண்களாலேயே தங்கள் வீடுகளில் இருந்து பார்க்கலாம் என அண்ணா அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது போன்ற மற்றொரு முழு சந்திர கிரகணம், இனி 2028-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிதான் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.



  • Sep 07, 2025 20:20 IST

    சந்திர கிரகணம்: கொடைக்கானலில் இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தில் காட்சிப்படுத்த ஏற்பாடு; அனுமதி இலவசம்

    கொடைக்கானலில் இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தில் ராட்சத தொலை நோக்கிகள் மூலம் காட்சிப்படுத்தி விளக்க உரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 07, 2025 20:11 IST

    சந்திர கிரகணம் பார்க்கத் தயார்: மன்னா! ஏதும் தெரிகிறதா? 

    சந்திர கிரகணத்தைப் பார்க்க மக்கள் ஆவலுடன் தயாராக உள்ளனர். ஒரு எக்ஸ் பயனர், மொட்டை மாடியில் பெரிய தொலைநோக்கியை ட்ரைபாடில் பொருத்தி சந்திர கிரகணத்தைப் பார்க்க தயாராக இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, “சந்திர கிரகணம் இரவு 9.58 க்கு!ரெடி பண்ணுவோம்.. மன்னா!ஏதும் தெரிகிறதா…” என்று ஜாலியாக பதிவிட்டுள்ளார்.



  • Sep 07, 2025 19:30 IST

    சந்திர கிரகணம்: திருப்பதியில் தரிசனம் நிறுத்தம்; கோயில் நடை அடைப்பு

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருமலை ஏழுமலையான் கோவிலின் நடை 6 மணி நேரம் முன்னதாகவே மூடப்பட்டது. வழக்கமான தரிசன நேரம் ரத்து செய்யப்பட்டு, கருட சேவை உட்பட அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

     



  • Sep 07, 2025 19:19 IST

    கிரகணத்தை கண்டுகளிக்க சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் ஏற்பாடு

    7 ஆண்டுகளுக்குப் பின் சந்திர கிரகணத்தை சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் மக்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 8.58-க்கு தொடங்கும் கிரகணம் 11.01 மணிக்கு முழு கிரகணமாக மாறும்; பொதுமக்கள் இரவு 7 மணி முதல் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது



  • Sep 07, 2025 19:10 IST

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை அடைப்பு

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை அடைக்கப்பட்டுள்ளது. 12 மணி நேரத்திற்கு பின் நாளை அதிகாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். அன்னதான கூடத்திலும் பக்தர்களுக்கு உணவு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.



  • Sep 07, 2025 18:57 IST

    சந்திர கிரகணத்தை கண்டுகளிக்க ஏற்பாடுகள்

    7 ஆண்டுகளுக்குப் பின் சந்திர கிரகணத்தை சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் மக்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 9.58-க்கு தொடங்கும் கிரகணம் 11.01 மணிக்கு முழு கிரகணமாக மாறும். இதனையடுத்து பொதுமக்கள் இரவு 7 மணி முதல் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



  • Sep 07, 2025 18:53 IST

    இன்றிரவு ரத்த நிலவு எப்படி தெரியும்?

    பி.பி.சி தொகுத்தபடி, இந்தியாவில் நேரங்கள்:

    இந்திய நேரப்படி இரவு 8:58 – பெனும்பிரல் கிரகணம் தொடங்குகிறது

    இந்திய நேரப்படி இரவு 9:57 – பகுதி கிரகணம் தொடங்குகிறது

    இந்திய நேரப்படி இரவு 11:00 – மொத்த கிரகணம் தொடங்குகிறது

    இரவு 11:41 – அதிகபட்ச கிரகணம்

    காலை 12:22 – மொத்த கிரகணம் முடிகிறது

    காலை 1:26 – பகுதி கிரகணம் முடிகிறது

    காலை 2:25 – பெனும்பிரல் கிரகணம் முடிகிறது



  • Sep 07, 2025 18:43 IST

    சந்திர கிரகணம்: இந்தியாவில் பார்வை நேரம்

    சந்திர கிரகணத்தை இந்தியாவிலும் கண்டு ரசிக்க முடியும். மும்பை நேரப்படி (IST): இரவு 11:00 முதல் நள்ளிரவு 12:22 மணி வரை  இந்திய வானில் சந்திர கிரகணம் தோன்றும்.



  • Sep 07, 2025 18:41 IST

    சந்திர கிரகணம்: பல்வேறு நேர மண்டலங்களில் பார்வை நேரம்

    இந்த முழுமை நிலையை பல்வேறு நேர மண்டலங்களில் காண முடியும். உலகின் சுமார் 77% மக்கள் கிரகணத்தின் முழு நிலையைப் பார்க்க முடியும் என கூறப்படுகிறது.

    லண்டன் (BST): இரவு 7:30 முதல் 7:52 மணி வரை,

    பாரிஸ் (CEST) மற்றும் கேப் டவுன் (SAST): இரவு 7:30 முதல் 8:52 மணி வரை,

    இஸ்தான்புல், கெய்ரோ, மற்றும் நைரோபி (EEST/EAT): இரவு 8:30 முதல் 9:5 மணி வரை,

    தெஹ்ரான் (IRST) இரவு 9 முதல் 10:22 மணி வரை.

    பாங்காக் (ICT): நள்ளிரவு 12:30 முதல் 1:52 மணி வரை

    பெய்ஜிங் (CST), ஹாங்காங் (HKT), மற்றும் பெர்த் (AWST): அதிகாலை 1:30 முதல் 2:52 மணி வரை

    டோக்கியோ (JST): அதிகாலை 2:30 முதல் 3:52 மணி வரை

    சிட்னி (AEST): அதிகாலை 3:30 முதல் 4:52 மணி வரை



  • Sep 07, 2025 18:40 IST

    சந்திர கிரகணம்: வெறும் கண்ணால் பார்க்கலாமா?

    முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது. சூரிய கிரகணத்தைப் போல், இதற்கு பிரத்யேக கண்ணாடி, லென்ஸ் அல்லது வேறு எந்த உபகரணங்களும் தேவையில்லை. முழுமைநிலையில் சந்திரனின் சிவப்பு நிறம் பூமியின் வளிமண்டலத்தில் சூரிய ஒளி சிதறுவதால் ஏற்படுவதால், அதை வெறும் கண்ணால் தெளிவாகக் காணலாம். பைனாகுலர் அல்லது சிறிய தொலைநோக்கி மூலம் மேலும் பல விவரங்களைப் பார்க்கலாம். 



Lunar Eclipse Science

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: