சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் உள்ள 'கிளாஸ்' ('CLASS') எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் ( X-ray spectrometer) நிலவில் ஏராளமான சோடியம் இருப்பதை கண்டுபிடித்து படம் எடுத்து அனுப்பியுள்ளது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
சந்திரயான்-1 எக்ஸ்-ரே ஃப்ளோரசன்ஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் (C1XS) கேரக்டர்ரிஸ்டிக் லைனிலிருந்து சோடியத்தைக் கண்டறிந்தது, இது தற்போது புது கண்டுபிடிப்பிற்கு வழிவகுத்து கொடுத்துள்ளது.
'தி ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ்' இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையில், இது குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரயான் -2 முதல் முறையாக நிலவில் உள்ள சோடியத்தின் அளவை கிளாஸ்
எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் மூலம் வரைபடமாக்கி உள்ளது.
பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் யு. ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் கிளாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் வடிவமைக்கப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த சோடியம் அணுக்களை சூரியக் காற்று அல்லது புற ஊதா கதிர்வீச்சு மூலம் அவை சந்திர கனிமங்களின் ஒரு பகுதியாக இருப்பதை விட மிக எளிதாக மேற்பரப்பில் இருந்து வெளியேற்றப்படும். எக்ஸோஸ்பியருக்கு அணுக்களின் தொடர்ச்சியான விநியோகத்தை விளக்குகிறது.
சுவாரஸ்ய அம்சம் என்னவென்றால், நிலவின் மேற்பரப்பில் உள்ள அல்கலி, மென்மையான பகுதி அணுக்களுடன் அரிதாகவே தொடர்பு கொள்கிறது.
சந்திரயான் -2 இன் இந்த புதிய கண்டுபிடிப்பு நிலவின் மேற்பரப்பு மற்றும் அதன் தொடர்பு குறித்த ஆய்வுகளை மேலும் விரிவுபடுத்த உதவும் என இஸ்ரோ கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“