Advertisment

அடுத்த மாதம் சந்திரயான்-3; ஆதித்யா-எல்1 ஏவுதல் எப்போது? இஸ்ரோ தலைவர் முக்கிய தகவல்

சந்திரயான்-3 ஜூலையிலும், ஆதித்யா-எல்1 ஆகஸ்ட் மாதத்திலும் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறினார்.

author-image
WebDesk
Jun 03, 2023 19:11 IST
isro somnath

Isro chairman S Somanath

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் இந்தியா டுடே கான்க்ளேவ் சவுத் 2023 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது இதை தெரிவித்தார். சந்திரயான்-3 ஜூலை மாதம் நிலவுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

Advertisment

அவர் பேசுகையில், "முக்கியமாக சந்திரயான் -3 விண்கலம் சந்திரயான் -2 ஐப் போன்றே இருக்கும். அதன் செயல்பாடுகளும் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்கலன் நோக்கம், வடிவமைப்பை அனைத்தும் சந்திரயான் -2 ஐப் போன்றே இருக்கும் என்றார்.

சந்திரயான் -2 ஏவுதல் பணியில் தோல்வியடைந்தோம், ஆனால் ஆர்பிட்டர் வெற்றிகரமாக நிலவில் நிலைநிறுத்தப்பட்டு அங்கு பணிகளை செய்து வருகிறது. எங்களுக்குத் தரவை வழங்கி வருகிறது. என்ன தவறு நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளவும், பிரச்சனை என்ன என்பதைப் புரிந்துகொள்ளவும் நாங்கள் சிரமப்பட்டோம். பின்னர் மென்பொருள் பிழை என்பதை அறிந்தோம்" என்றார்.

அதே நேரம் சூரிய திட்டமான ஆதித்யா எல்-1 பற்றி பேசுகையில், சோலார் கரோனாலை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட ஆதித்யா எல்-1 மிஷன் ஆகஸ்ட் மாதம் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விண்கலம் லாக்ரேஞ்ச் பாயின்ட் 1-க்கு ஏவப்படும், இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு தொலைவில் சூரியனை தொடர்ந்து கண்காணிக்கும் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Science #Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment