ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்விஎம்3 ராக்கெட்டில் சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), நிலவின் மேற்பரப்பில் ஒரு ரோபோடிக் லேண்டரை மென்மையாக தரையிறக்குவதற்கான தனது இரண்டாவது முயற்சியை வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது.
சாஃப்ட் லேண்டிங் வெற்றி பெற்றால், இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடாக இந்தியா மாறும்.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 14.35 மணிக்கு ஏவப்படுவதற்கு முன்னதாக, ஏவுதலுக்கான கவுன்ட் டவுன் வியாழன் பிற்பகல் தொடங்கியது.
சந்திரயான்-3 விண்கலம் 3,895 கிலோ எடை கொண்டது. ஏற்கெனவே ஆர்பிட்டர், நிலவை சுற்றி வருவதால், இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன. இவை உந்துவிசை கலன் (Propulsion Module) மூலம் நிலவின் சுற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்லப்படும். அதன்பின் உந்துவிசை கலனிருந்து லேண்டர் பிரிந்து நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும்.
தொடர்ந்து லேண்டர் மற்றும் ரோவர் கலன்கள் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும்.
சந்திரயானின் லேண்டர் கலன் நிலவின் தென்துருவத்தில் ஆகஸ்ட் 23 அல்லது 24-ம் தேதி தரையிறக்கப்பட உள்ளது.
இந்த திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் சந்திரனில் சூரிய ஒளியின் முதல் நாளில் தரையிறங்க வேண்டும் என்றால், மிஷனுக்காக குறைந்தபட்சம் 15 நாட்கள் ஆயுளைக் கொண்டிருப்போம். எல்லாம் சரியாக நடந்தால் ஆகஸ்ட் 23 ஆம் தேதி தரையிறங்கும் அல்லது அது ஆகஸ்ட் 24 ஆகவும் இருக்கலாம். ஆனால் ஆகஸ்ட் 25 அல்லது 26 ஆக இருக்க முடியாது.
பிறகு என்ன செய்வோம், நாங்கள் தரையிறங்க மாட்டோம், மீண்டும் 15 நாட்கள் சூரியன் ஓளி வரும் வரை ஒரு மாதம் காத்திருப்போம், பின்னர் செப்டம்பர் 20 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு தரையிறங்கலாம், என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் பெங்களூருவில் செய்தியாளர் சந்திப்பில் ஜூலை 7ஆம் தேதி தெரிவித்தார்.
சந்திரயான் 3 மிஷனின் ஏவுதல் கட்டம் அனைத்தும் LVM3 ராக்கெட்டைப் பற்றியது.
LVM3 ராக்கெட் என்பது GSLV Mk III ராக்கெட்டின் மாறுபாடு ஆகும், இது 4000 கிலோ வரை விண்வெளியில் புவி பரிமாற்ற சுற்றுப்பாதையில் (GTO) கொண்டு செல்லும் திறன் கொண்டது.
ஜூலை 22, 2019 அன்று சந்திரயான் 2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய GSLV Mk III, டிசம்பர் 2014 இல் அதன் முதல் வெற்றிகரமான விண்வெளி பயணத்தை பெற்றது.
எவ்வாறாயினும், அதன் விக்ரம் லேண்டர் மெதுவாக தரையிறங்க முயற்சித்தபோது லேண்டரில் உள்ள பிரேக்கிங் அமைப்பில் ஏற்பட்ட கோளாறுகளை தொடர்ந்து சந்திரனின் மேற்பரப்பில் மோதியதால், அதன் லுனார் கட்டத்தில் இந்த மிஷன் தோல்வியடைந்தது.
2019 ஆம் ஆண்டுக்கான மிஷன் முதலில் ஜூலை 15 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் இறுதி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில்நுட்ப முரண்பாடுகள் காரணமாக ஏவுதல் நிறுத்தப்பட்டது. பிறகு பிரச்னைகள் சரி செய்யப்பட்டு, ஒரு வாரம் கழித்து பணி துவக்கப்பட்டது.
சந்திரயான் 3 மிஷனில் சந்திரயான் 2 மாட்யூல் போன்ற ஆர்பிட்டர் மாட்யூல் இல்லை. அதன் லேண்டருக்குள், லேண்டர் மற்றும் ரோவர் மட்டுமே உள்ளது. விண்வெளியில் இன்னும் உயிருடன் இருக்கும் சந்திரயான் 2 இன் ஆர்பிட்டர் சந்திரயான் 3 க்கு மீண்டும் தகவல்தொடர்பு இணைப்பை வழங்கும்.
துல்லியமான ஏவுதல் மற்றும் சுற்றுப்பாதை சூழ்ச்சிகள் காரணமாக, ஆர்பிட்டரின் மிஷன் ஆயுள், ஏழு ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது.
ஆர்பிட்டரிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் விஞ்ஞான சமூகத்திற்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன, என்று ISRO செப்டம்பர் 7, 2019 அன்று சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கூறியது.
சந்திரயான் 3 திட்டம், தோல்வியடைந்த 2019 மிஷனிலிருந்து பல தொழில்நுட்ப கற்றல்களை உள்ளடக்கியது.
இதில் நிலவின் மேற்பரப்பில் லேண்டரின் அணுகுமுறை வேகத்தைக் கணக்கிடுவதற்கும் சரிசெய்வதற்கும், மென்மையான தரையிறக்கத்தை எளிதாக்குவதற்கு பிரேக்கிங் சிஸ்டம் செய்வதற்கும் redundancies உருவாக்கியுள்ளது.
சந்திரயான் 2 விண்கலத்தில் உள்ள லேண்டர் ஒரு வெற்றிகரமான மென்மையான தரையிறக்கத்திற்கு அதன் வேகத்தை - தானியங்கு அமைப்புகள் மூலம் - மணிக்கு 6000 கிமீ / மணி முதல் சுமார் 7.2 கிமீ / மணி வரை குறைக்க வேண்டியிருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் பிரேக்கிங் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
”முதல் விஷயம் பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டும். நாங்கள் அதை மதிப்பாய்வு செய்து பல்வேறு அம்சங்களை வலுப்படுத்தியுள்ளோம்.
சந்திரயான் 2 இன் வடிவமைப்பு சிறிய அளவு அதிகரிப்புடன் 2m/sec (7.2 km/hr) வேகத்தில் தரையிறங்குவதாக இருந்தது, ஆனால் நாம் இப்போது தரையிறங்குவதற்கான வேக வரம்பை அதிகரித்துள்ளோம். ஆற்றலை உறிஞ்சும் திறனை நாங்கள் உருவாக்கியுள்ளோம், ”என்று இஸ்ரோ தலைவர் கடந்த வாரம் கூறினார்.
இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் மற்றும் சந்திரயான் 3 திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் வியாழக்கிழமை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கோயில்களுக்குச் சென்று மிஷன் வெற்றிகரமாக அமைய பிரார்த்தனை செய்தனர்.
இஸ்ரோ தலைவர், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திற்கு அருகில் உள்ள சூல்லூர்பேட்டையில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்றார், அதே நேரத்தில் திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் குழு திருப்பதி கோயிலுக்குச் சென்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.