Advertisment

மிகுந்த எதிர்பார்ப்பு: சந்திரயான்-3 ஏவுதல் எப்போது? வெளியானது முக்கிய தகவல்

இந்தியாவின் நிலவு திட்டத்தின் ஒரு பகுதியாக தயாராகி வரும் சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதம் ஏவப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
ISRO

ISRO

இந்தியா சந்திரயான் நிலவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சந்திரயான் 1,2 நிலவுக்கு அனுப்பபட்ட நிலையில் சந்திரயான்-3 விண்கலம் இந்தாண்டு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்தது. அந்தவகையில் சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதம் நிலவுக்கு ஏவப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விண்கலத்தின் திறனை சோதிக்கும் அத்தியாவசிய சோதனைகள் கடந்த மார்ச் மாதம் வெற்றிகரமாக முடிந்ததாக கூறப்பட்டுள்ளது.

Advertisment

சந்திரயான் திட்டத்தின் 3-வது விண்கலம் இந்தியாவின் அதிக எடை கொண்ட ராக்கெட்டான லாஞ்ச் வெஹிக்கிள் மார்க்-III ( GSLV Mk III) மூலம் ஏவப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விண்கலத்துடன் லேண்டர், ரோவர் அனுப்பபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-2 பயணத்தின் போது ஆர்பிட்டர் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதால் இந்த திட்டத்தில் ஆர்பிட்டர் ஏவப்படவில்லை.

முன்னதாக, 2019-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பபட்ட சந்திரயான்-2 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் நிலவின் தரையில் மோதி தோல்வியடைந்தது. இருப்பினும் ஆர்பிட்டர் நிலைநிறுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் சந்திரயான்-3 ஏவுதல் குறித்து இஸ்ரோ இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Science
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment