பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் டெலிமெட்ரி, கண்காணிப்பு மற்றும் கட்டளை மையம் விண்கலத்திலிருந்து தரவுகளைப் பெற்று அதற்கான கமெண்ட்கள் (உத்தரவுகளை) தெரிவிக்கும். அதே நேரத்தில் MOX மையம் விஞ்ஞானிகள் பணிகளை கண்காணிக்கும் மையமாகும்.
சந்திரயான்-3 லேண்டர் இன்று (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. இறுதிக்கட்டப் பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ISTRAC, MOX மையங்கள் இந்த திட்டத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது.
ISTRAC மையம்
ISTRAC மையம் டெலிமெட்ரி, கண்காணிப்பு மற்றும் கட்டளைச் சேவைகளை ராக்கெட் செயற்கைக் கோள் அல்லது விண்கலத்துடன் ஏவுவது முதல் செயற்கைக் கோளை சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கும், செயற்கைக் கோளின் ஆயுட்காலம் வரைக்கும் சேவைகளை வழங்குகிறது.
ISTRAC ஆனது பெங்களூரு, லக்னோ, மொரிஷியஸ், ஸ்ரீஹரிகோட்டா, போர்ட் பிளேர், திருவனந்தபுரம், புருனே மற்றும் பியாக் (இந்தோனேசியா) மற்றும் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் நிலையங்களில் தரை நிலையங்களின் வலையமைப்பைக் கொண்டுள்ளது.
ISTRAC என்பது மங்கள்யான் முதல் செவ்வாய் மற்றும் சந்திரயான் 1, 2 மற்றும் 3 போன்ற இஸ்ரோவின் பெரிய விண்வெளி திட்டங்களுக்கு மிஷன் ஆப்ரேஷன் சென்டராக உள்ளது. ISTRAC மையம் விண்கலத்திலிருந்து தரவைப் பெற்று அதற்கு கட்டளைகளைத் தெரிவிக்கும்.
ISTRAC மையம், இஸ்ரோவின் பெரிய திட்டங்களுக்காக பெங்களூருக்கு வெளியே நிறுவப்பட்ட டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் ற்றும் சந்திரயான் 3-க்கான ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் தரை நிலையங்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
மிஷன் ஆப்ரேஷன் சென்டர் (MOX)
MOX ஆனது ஒரு மிஷன் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஒரு விண்கலத்தை 24×7 கண்காணிக்கும் பணி பகுப்பாய்வு அறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ISTRAC இல் இரண்டு MOX வளாகங்கள் உள்ளன.
சந்திரயான்-3 ஏவப்பட்டதிலிருந்து, விண்கலத்தின் ஆரோக்கிய நிலை மற்றும் பிற கருவிகளுக்கான அளவுருக்கள் MOX?-ல் இருந்து கட்டுப்படுத்தப்படுகின்றன. MOX வசதிகள் முதன்முதலில் ISTRAC இல் சந்திரயான்-1 ஃப்ளை-பை-தி-மூன் பணிக்காக 2008 இல் அமைக்கப்பட்டன.
MOX மையத்தில் 100 விஞ்ஞானிகள் அமர்ந்து ஒரு விண்கலத்தை கண்காணிக்க முடியும். MOX ஒரு ஆபரேஷன் தியேட்டரை
போன்று இருக்கும். விஞ்ஞானிகள் ஒரு கேலரியின் இருபுறமும் அமர்ந்து ஒரு விண்கலத்தில் இருந்து தரவுகளை பெறுவார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“