Advertisment

சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 14-ல் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 14-ம் தேதி நிலவுக்கு அனுப்பபடும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Chandrayaan-3 mission

Chandrayaan-3 mission

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்தில் இருந்து ஜூலை 14-ம் தேதி சந்திரயான்-3 விண்கலம்
விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

Advertisment

இஸ்ரோவின் அதிக எடை கொண்ட ஹெவிலிஃப்ட் ராக்கெட்டான எல்.வி.எம்-3 மூலம் விண்கலம் நிலவுக்கு அனுப்பபடுகிறது. ஜூலை 14, 2023 மதியம் 2:35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (SDSC) இருந்து ஏவப்படுகிறது என இஸ்ரோ ட்வீட் செய்தது. இரண்டு தினங்களுக்கு முன் விண்கலம் ஜி.எஸ்.எல்.வி எம்-3 ராக்கெட் உடன் இணைக்கப்பட்டது.

சந்திரயான்-3 விண்கலம், தரையிறங்கும் தளத்தின் அருகாமையில் உள்ள நிலவின் ரெகோலித், சந்திர நில அதிர்வு, சந்திர மேற்பரப்பு பிளாஸ்மா சூழல் மற்றும் தனிம கலவை ஆகியவற்றின் தெர்மோபிசிக்கல் பண்புகளை ஆய்வு செய்வதற்கான அறிவியல் கருவிகளைக் கொண்டுள்ளது.

லேண்டர், ரோவருடன் அனுப்பபடும் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment