scorecardresearch

சொந்த விண்வெளி நிலையத்திற்கு 3 வீரர்களை அனுப்பிய சீனா

ஷென்சோ-15 திட்டம் மூலம் தனது சொந்த விண்வெளி நிலையமான டியாங்காங் நிலையத்திற்கு 3 வீரர்களை சீனா வெற்றிகரமாக அனுப்பியது.

சொந்த விண்வெளி நிலையத்திற்கு 3 வீரர்களை அனுப்பிய சீனா

சீனா விண்வெளியில் நிரந்தரமாக தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு அதை கிட்டதிட்ட நிறைவு செய்துள்ளது. சீனாவின் சொந்த விண்வெளி நிலையத்திற்கு டியாங்காங் எனப் பெயரிடப்பட்டுள்ளது. டியாங்காங் பணிகளுக்காக சீனா விண்வெளி வீரர்கள் ஏற்கனவே அங்கு அனுப்பபட்டன.

இந்நிலையில் மேலும் 3 வீரர்களை சீனா டியாங்காங்கிற்கு அனுப்பியுள்ளது. ஜியுகுவான் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச்-2F ராக்கெட் மூலம் ஷென்சோ-15 (Shenzhou-15) அல்லது “Divine Vessel” என்ற விண்கலம் மூலம் 3 வீரர்கள் விண்வெளிக்கு வெற்றிகரமாக நேற்று அனுப்பபட்டனர்.

ஃபேய் ஜன்லாங், டெங் கிங்மிங், ஷாங் லூ ஆகிய 3 வீரர்கள் டியாங்காங்கில் தங்கி ஆய்வு மேற்கொள்கின்றனர். ஷென்சோ-15 விண்கலம் இந்த 3 வீரர்களை அங்கு விட்டுவிட்டு மேலும் 5 நாட்கள் அங்கு தங்கி ஏற்கனவே அங்கு ஷென்சோ-14 திட்டம் மூலம் அனுப்பபட்ட 3 வீரர்களை ஏற்றிக்கொண்டு பூமிக்கு திரும்புகிறது. சீன விண்வெளி வரலாற்றில் இதுபோன்று வீரர்கள் மாற்றிக்கெள்வது இதுவே முதல் முறையாகும்.

ஷென்சோ-15 குழுவினர் விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்கள் தங்கி பணிபுரிய உள்ளனர் என சீனா தெரிவித்துள்ளது. டியாங்காங் விண்வெளி நிலையப் பணிகள் கிட்டதிட்ட நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: China sends astronauts to celestial palace in historic space mission