சீனா விண்ணில் தனது நிரந்தர விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. டியாங்காங் எனப் பெயரிடப்பட்ட விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இதற்காக சீனா மூன்று விண்வெளி நிலைய தொகுதியை விண்ணில் அனுப்ப திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே ஒரு தொகுதி அனுப்பபட்ட நிலையில், நேற்று (ஜூலை 24) வென்டியன் ஆய்வக தொகுதி, லாங் மார்ச் 5B ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 23-டன் எடையுள்ள வென்டியன் ஆய்வக தொகுதி, தெற்கு ஹைனான் தீவில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்திலிருந்து நேற்று (ஜூலை 24) ஏவப்பட்டது.
17.9-மீட்டர் நீளமுள்ள வென்டியன் ஆய்வகத் தொகுதி, மூன்றாவது தொகுதியான மெங்டியன் தொகுதியுடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வென்டியன் தொகுதி ஏர்லாக் கேபின் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் முடிவடைந்தவுடன் இது நுழைவு, வெளியேறும் வசதிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் குறுகிய காலம் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்ள வசதியாக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசாவின் ஸ்பேஸ் லாஞ் சிஸ்டம்
நாசா தனது Space Launch system (SLS)ஸ்பேஸ் லாஞ் சிஸ்டம் ராக்கெட்டை அடுத்த மாதம் 29ஆம் தேதி சந்திரனுக்கு செலுத்தி சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. சந்திரனுக்கு சென்று விண்கலம் வெற்றிகரமாக திரும்பும் நிலையில், 2025ஆம் ஆண்டு மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட உள்ளது. 98 மீட்டர் உயரம் கொண்ட SLS ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலம் லிபர்ட்டி சிலையை விட (Statue of Liberty) உயரமானதாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil