சீனா விண்வெளியில் சொந்த விண்வெளி நிலையத்தை கட்டி முடித்துள்ளது. டியாங்காங் எனப் பெயரிடப்பட்ட விண்வெளி நிலையத்தை 3 தொகுதிகளாக அமைத்துள்ளது. zero gravity பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தில் ஆய்வகங்களில் அறிவியல் சோதனைகளை மேம்படுத்த சீனா பணிகளை செய்துவருகிறது.
அதன்படி புதிதாக கட்டப்பட்ட டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு ஆண்டு 2 திட்டங்கள் அதாவது மனிதர்களை டியாங்காங்கிற்கு அனுப்பும் திட்டங்களை செயல்படுத்துவதாக சீனா அறிவித்துள்ளது. மனிதர்கள் கொண்ட இரண்டு பயணங்களைத் தவிர, இரண்டு சரக்கு விண்கலங்களும் அனுப்பபடும் என சீன விண்வெளி மையம் (CMSA) தெரிவித்துள்ளது.
சீனா Tianzhou-6 என்ற சரக்கு விண்கலத்தை மே மாதம் ஏவ திட்டமிட்டுள்ளது. இது மைக்ரோ கிராவிட்டி ஆய்வகத்துடன் இணைக்கப்படுகிறது. இந்த விண்கலம் கோர் தொகுதியின் aft port பகுதியில் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூறுகையில், சீனா ஷென்சோ-17 விண்கலத்தை அக்டோபரில் ஏவுவதற்கான பணிகளை செய்து வருகிறது. இது கோர் தொகுதியின் முன் பகுதியில் இணைக்கப்படுகிறது. முன்னதாக, சீனா இந்தாண்டு 2023-இல் 60 விண்வெளித் திட்டங்களையும் 200-க்கும் மேற்பட்ட விண்கலங்களையும் ஏவ உள்ளதாக அறிவித்தது. சீனாவின் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை 2023-இல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை காணும் என்று தெரிவித்திருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/