நிலவில் வாழ்விடங்களை உருவாக்க, நீண்ட காலம் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் முயற்சியாக நிலவில் கட்டடம் கட்டுவதற்கு முதற்கட்டமாக 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வு செய்ய உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
2020-ம் ஆண்டு சீன தெய்வத்தின் பெயரிடப்பட்ட சாங்கி 5 ஆளில்லா விண்கலம் நிலவின் மண் மாதிரிகளை சோதிக்க அனுப்பபட்டது. இதைதொடர்ந்து நிலவில் சீனா மண், செங்கல் கொண்டு கட்டுமானம் மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது. மேலும் 2030-ம் ஆண்டு நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்பவும் திட்டமிட்டுள்ளது.
சாங்கி 8 நிலவு திட்டம் மூலம் சுற்றுச்சூழல் மற்றும் கனிம கலவை பற்றிய ஆன்-சைட் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மேலும் 3டி பிரிண்டிங் போன்ற தொழில்நுட்பங்களை சந்திர மேற்பரப்பில் பயன்படுத்த முடியுமா என்பதையும் இதன் மூலம் ஆய்வு செய்யப்படும் என விஞ்ஞானி Wu Weiren தெரிவித்தார்.
நாம் நீண்ட காலம் நிலவில் தங்க வேண்டுமென்றால் அதற்கு நிலவின் சொந்த பொருட்களைப் பயன்படுத்தி நிலையங்களை அமைக்க வேண்டுவது அவசியம் என்றார். மேலும் சீனா 5 ஆண்டுகளில் நிலவில் உள்ள மண்ணைப் பயன்படுத்தி சந்திர நிலையம் உருவாக்க விரும்புகிறது என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து சாங்கி 8 விண்கலம் மூலம் பிரத்யேக ரோபோவையும் தயாரித்து அனுப்ப உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“