சீனா விண்வெளில் தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருகிறது.
டியாங்காங்-1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் விண்வெளி நிலையம் அமைப்படும் என சீனா தெரிவித்துள்ளது. அண்மையில் விண்வெளி நிலையம் அமைப்பதற்கான பொருட்களை சீனா ராக்கெட் மூலம் அனுப்பியிருந்தது.
இந்தநிலையில், விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டுள்ள சீன வீரர்கள் விண்வெளி நிலையம் அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சீன விண்வெளி வீரர்களான காய் சூஷே மற்றும் சென் டோங் ஆகியோர் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 17) சீனாவின் புதிய விண்வெளி நிலையமான டியாங்காங்கில் இருந்து நடைப்பயணம் செய்தனர்.
சீனா ஊடகங்களின் கூற்றுப்படி, விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்தை திறக்க ஏதுவாக, அவசரகாலத்தில் பயன்படும்படி ஹட்ச் கதவை வெளியில் இருந்து திறக்க ஒரு கைப்பிடியையும், நிலைய ஆய்வக தொகுதி வென்டியனில் பம்ப்களை நிறுவினர். இந்த பணிக்காக வீரர்கள் நடைப்பயணம் மேற்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 முறை நடைபயணம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அமெரிக்காவால் விலக்கப்பட்ட பின்னர் சீனா தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருகிறது. விண்வெளி நிலையத்தின் பணிகளை ஆய்வு செய்ய சீனா வீரர்களை அனுப்பியுள்ளது. சமீபத்திய விண்வெளி நடைப்பயணம் இரண்டாவது முறையாகும். அதாவது 6 மாத பயணத்தில் 2வது முறையாக வீரர்கள் நடைபயணம் செய்துள்ளனர்.
புதிய விண்வெளி நிலையத்தில் 2 ஆய்வகங்களை நிறுவ சீனா திட்டமிட்டுள்ளது. இதில் முதலாவது, 23 டன் தொகுதி ஆய்வகம், கடந்த ஜூலையில் நிலையத்தில் சேர்க்கப்பட்டது, மற்றொன்று இந்த ஆண்டு இறுதியில் அனுப்பபட உள்ளது.
விண்வெளியில் தற்போது உள்ள மூன்று பேர் கொண்ட குழுவில் லியு யாங், சூஷே மற்றும் டோங் நடைபயணம் செய்த போது உள்ளே இருந்து பணிகளை மேற்கொண்டு உதவினார். லியு யாங் மற்றும் சென்டோங் இருவரும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு முதல் விண்வெளி நடைபயணம் மேற்கொண்டனர்.
மேலும் 3 வீரர்கள்
இந்தநிலையில், விண்வெளி நிலைய பணிக்காக மேலும் 3 விண்வெளி வீரர்கள் இணைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி நிலையத்தில் 6 பேர் பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும்.
முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய மூன்றாவது நாடு சீனா ஆகும். சீனா நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு ரோவர்களை அனுப்பியது. மேலும், நிலவில் ஆய்வு செய்து மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil