சிறுகோள்கள் என்பது சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் உருவானதில் எஞ்சியிருக்கும் பாறைத் துண்டுகள் ஆகும். நாசாவின் கூற்றுப்படி, ஒரு சிறுகோள் பூமியிலிருந்து சூரியனுக்கான தூரத்தை விட 1.3 மடங்கு குறைவாக இருக்கும் போது பூமிக்கு அருகில் உள்ள பொருளாக வகைப்படுத்தப்படுகிறது. தற்போது பூமியை வேகமாக நெருங்கி வரும் சிறுகோள் (விண்வெளி பாறை) டிசம்பர் 15-ம் தேதி பூமியில் இருந்து 6,86,000 கிமீ தொலைவில் கடந்து செல்லும். இந்த சிறுகோள் லிபர்ட்டி சிலையை விட சிறியது ஆகும்.
பூமிக்கு அருகில் உள்ள பொருள் (Near Earth Object) என்று கூறப்படும் சிறுகோள் டிசம்பர் 15 முதல் 17 வரை
ஐரோப்பாவில் தென்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஏன் இந்த சிறுகோள் சுவாரசியமானது?
இந்த சிறுகோள் குறித்து எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இது வானியலாளர்களுக்கு சவால் மட்டும், ஆர்வத்தை தூண்டியுள்ளது. மேலும் இது எவ்வாறு உருவானது, எவ்வளது பெரியது என யாருக்கும் தெரியவில்லை. இந்த நிச்சயமற்ற தன்மை, மேலும் பல நடுத்தர கோள்கள் இருப்பதை காட்டுகிறது. இருப்பினும் இந்த சிறுகோள் பூமிக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“