ஒரு முறை பயணம், நோ ரிட்டன்... 400 ஆண்டுகால விண்வெளி பயணத்திற்குத் தயாராகும் ராட்சத விண்கலம்!

விண்வெளி வீரர்களை அல்லாமல், சுமார் 1,000 மனிதர்களைக் கொண்ட நாகரிகத்தையே சுமந்து செல்வது இதன் நோக்கம். இது 4.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புரோக்சிமா செண்டாரி பி என்ற கோளை நோக்கிச் சுமார் 400 ஆண்டுகள் பயணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர்களை அல்லாமல், சுமார் 1,000 மனிதர்களைக் கொண்ட நாகரிகத்தையே சுமந்து செல்வது இதன் நோக்கம். இது 4.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புரோக்சிமா செண்டாரி பி என்ற கோளை நோக்கிச் சுமார் 400 ஆண்டுகள் பயணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

author-image
Meenakshi Sundaram S
New Update
Chrysalis Space

ஒரு முறை பயணம், நோ ரிட்டன்... 400 ஆண்டுகால பயணத்திற்குத் தயாராகும் ராட்சத விண்கலம்!

மனிதகுலம் பூமியிலிருந்து தப்பிச் செல்வதை பற்றி யோசித்தால், முதலில் நினைவுக்கு வருவது செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் சின்னஞ்சிறிய, அதிவேக ராக்கெட்டுகள்தான். ஆனால், விஞ்ஞானிகள் ஒரு சவாலான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளனர்: அது மிகப்பெரியது, மிக மெதுவாகப் பயணிப்பது, மேலும் ஒருமுறை கிளம்பினால் திரும்பவே வராது. அதுதான் 'கிறிசாலிஸ்' (Chrysalis). இது 2.4 பில்லியன் டன் எடையுள்ள, மன்ஹாடன் தீவை விட நீளமான 'ஜெனரேஷன் விண்கலம்' (Generation Ship). இது விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்ல அல்ல, மாறாக ஒரு நகரத்தையே சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரமான புரோக்சிமா செண்டாரி பி (Proxima Centauri b). இது 4.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த பயணத்தை முடிக்கக் கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் ஆகும். சுமார் 1,000 மனிதர்கள். இவர்கள் இந்த விண்கலத்திலேயே பிறந்து, வளர்ந்து, இறந்து போவார்கள். இதில் பிறந்தவர்கள் யாரும் பூமியைப் பார்க்க மாட்டார்கள். இவ்வளவு பெரிய விண்கலம் மெதுவாகச் சுழலும் போது, உள்ளே வசிப்பவர்களுக்கு எந்தவிதமான உடல்நலக் குறைவும் ஏற்படாமல் இருக்க, செயற்கை ஈர்ப்புவிசையை (Artificial Gravity) உருவாக்குகிறது.

கிறிசாலிஸ் உள்ளே என்னவெல்லாம் இருக்கும்?

செயற்கை ஈர்ப்புவிசையை உருவாக்க, விண்கலத்தின் மையப்பகுதி தொடர்ச்சியாகச் சுழலும் சிலிண்டர்களைக் கொண்டிருக்கும். பூமியின் இயற்கையான சூழலை உருவகப்படுத்தும் பிரம்மாண்டமான இடங்கள் இருக்கும். இங்குதான் உணவு உற்பத்தி, கழிவு மறுசுழற்சி, நீர் சுழற்சி அனைத்தும் நடைபெறும்.

ஆண்டு விழாக்கள், விண்மீன்களைப் பார்ப்பதற்காக 130 மீட்டர் உயரமுள்ள 'விண்வெளி குவிமாடமும்' இருக்கும். செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோக்கள், மற்றும் மனிதர்கள் இணைந்து வாழ்க்கைத் தேவைகள், நிர்வாகம் மற்றும் கல்வியைக் கவனித்துக் கொள்வார்கள். சுருக்கமாகச் சொன்னால், இது வெறும் விண்கலம் அல்ல; இது விண்வெளியில் நகரும் ஒரு கலாச்சாரம்!

Advertisment
Advertisements

இவ்வளவு பிரம்மாண்டமான கப்பலை பூமியில் கட்டவே முடியாது. எனவே, இந்தக் கட்டுமானம் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள நிலையான ஈர்ப்புவிசைப் பகுதியான லாக்ரேஞ்ச் புள்ளி 1 (L1)-இல் விண்வெளியிலேயே நடைபெறும். விண்வெளியில் கட்டுமானத்திற்குத் தேவையான அனைத்து சூரிய ஒளியும், குறைவான ஈர்ப்புவிசையும் இந்தப் புள்ளியில் கிடைப்பதால், இதுவே ஏவுதளமாகவும் செயல்படும். ஆனால், இந்தப் பயணத்திற்கான மனிதர்களைத் தயார் செய்யும் திட்டம் மிகவும் ஆச்சரியமானது.

விண்கலம் ஏவுவதற்கு முன்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் பல தசாப்தங்களுக்கு அண்டார்டிகாவில் தனிமைப்படுத்தப்பட்டு வாழ்வார்கள். விண்வெளியில் நீண்ட காலம் அடைபட்டிருப்பதால் ஏற்படும் சமூக மற்றும் உளவியல் சவால்களைச் சமாளிக்க இந்தக் கடுமையான தனிமைப் பயிற்சி அவசியம். 'கிறிசாலிஸ்' திட்டம், வெறும் பொறியியல் சவால்களை மட்டும் கொண்டதல்ல. அது நம்மை ஒரு முக்கியமான கேள்வியையும் சிந்திக்க வைக்கிறது. 

Science

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: