ஞாயிற்றுக்கிழமை விண்ணில் ஏவப்படும் எல்.வி.எம்- 3 : கவுண்ட்டவுன் தொடக்கம்

36 செயற்கைக் கோள்களுடன் நாளை விண்ணில் ஏவப்படும் இஸ்ரோவின் எல்.வி.எம்- 3 ராக்கெட்கான கவுண்ட்டவுன் தொடங்கியது.

ISRO LVM-III launch
ISRO LVM-III launch

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிக எடை கொண்ட ராக்கெட்டான எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் நாளை (மார்ச் 26) இரண்டாவது மற்றும் கடைசி ஒன்வெப் விண்கலத் தொகுப்பு (36 செயற்கைக் கோள்கைளை) சுமந்து செல்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது தளத்தில் இருந்து காலை 9 மணிக்கு விண்வெளிக்கு (Low Earth Orbit -LEO) பகுதிக்கு ஏவப்படுகிறது. இதற்கான கவுண்ட்டவுன் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் தொடங்கியது.

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட நிறுவனம், இங்கிலாந்து அரசாங்கம் மற்றும் இந்தியாவின் பாரதி நிறுவனத்தின் ஆதரவுடன் இன்டர்நெட், பிராட்பேண்ட் இணைப்பை மேம்படுத்த ஒன்வெப் செயற்கைக்கோள்கள் ஏவப்படுகிறது. மொத்தம் 648 செயற்கைக்கோள்கள் ஏவ திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது முதல் தொகுதி நாளையுடன் நிறைவடையும். செயற்கைக்கோள்கள் 12 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, பூமியில் இருந்து 1200 கிலோமீட்டர் உயரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் இன்டர்நெட், பிராட்பேண்ட் சேவையை மேம்படுத்த செயற்கைக் கோள்கள் ஏவப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Countdown begins for lvm iii launch with 36 oneweb satellites

Exit mobile version