சூப்பர் மூன் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி நிகழ்ந்தது. அதை பார்த்தோம். இந்நிலையில் இதைவிட முக்கியத்துவம் வாய்ந்த, சூப்பர் ப்ளூ மூன் இன்று இரவு நிகழ உள்ளது.
இந்நிலையில் இதுதான் இந்த மாதத்தில் இரண்டாவது நிகழும் பவுர்ணமி ஆகும். நாசா கூறுகையில் இந்த நிகழ்வை யாரும் தவறவிடக்கூடாது என்று நாசா தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதைத்தொடர்ந்து 20 வருடங்கள் கழித்து இது நிகழலாம் என்று கூறப்படுகிறது. சூப்பர் ப்ளூ மூன் நேரத்தில் நிலவு பவுர்ணமி நாட்களில் தெரிவதைவிட 7 % பெரிதாக தெரியும். இந்த மூன்று வகையில் உள்ள வித்தியாசத்தை தெரிந்துகொள்ளலாம்.
சூப்பர் புளூ மூன்
சந்திரன் பூமியை சுற்றும்போது, எலிபிட்டிகல் வடிவம் ஏற்படும். பூமி இந்த எலிப்ஸ் வடிவத்தின் ஒரு பக்கத்திற்கு நெருங்கி வரும்போது இந்த சூப்பர் புளூ மூன் ஏற்படுகிறது. எல்லா மாதமும் பூமியை சந்திரன் சுற்றும்போது, பூமிக்கு மிக அருகில் ( perigee) செல்லும். அதுபோல பூமிக்கு தூரத்தில் ( apogee) சுற்றும். இப்படி பூமியை சந்திரன் சுற்றி வரும்போது, பூமிக்கு நெருக்கமாக இருக்கும்போது, நிலவு முழு நிலவாக இருந்தால், அதை சூப்பர் ப்ளூ மூன் என்று அழைப்பார்கள். பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தால் நிலவும் பெரிதாவும், நல்ல வெளிச்சத்துடன் தெரியும்.
ப்ளூ மூன்
மாதத்தில் இரண்டு முறை பவுர்ணமி ஏற்பட்டால் அது ப்ளூ மூன் என்று அழைப்பார்கள். சந்திரன் சுற்றும்போது 29.5 நாட்கள் எடுத்துகொள்வதால், மாதத்தின் முதல் முறையிலும் மாதம் முடியும்போதும் பவுர்ணமி ஏற்படும். 2 முதல் 3 வருடங்களுக்கு ஒரு முறை ப்ளூ மூன் நடைபெறுகிறது.
சூப்பர் மூன்
சந்திரன் வழிப்பாதை பூமிக்கு அருகில் இருக்கும்போது, பவுர்ணமி நிலவும் சேர்ந்து வந்தால் சூப்பர் மூன் நிகழும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“