நீல்ஸ் போர் நிறுவனம், கோபன்ஹேகன் பல்கலைக்கழகம் மற்றும் டென்மார்க்கின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வானியற்பியல் வல்லுநர்கள் ஒரு விண்மீன் திரள்கள் மற்றும் ஒரு வானியல் பொருள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள பண்புகளைக் கொண்ட தொலைதூரப் பொருளைக் கண்டறிந்துள்ளனர்.
இது ஹப்பிள் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக கண்டறியப்பட்ட பொருளுக்கு GNz7q என்று இந்தக் குழு பெயரிட்டுள்ளது.
அண்ட பெருவெடிப்புக்கு 750 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பொருள் உருவாகியுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
காஸ்மிக் டான் என்று அழைக்கப்படும் காலகட்டத்தில் இது உருவாகி இருக்கிறது. கருந்துளைக்கு முன்பே இது உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுபோன்ற பொருள் இருக்கக் கூடும் என்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், முதல் முறையாக இப்போது நிஜத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது.
இது தூசி நிறைந்த நட்சத்திர வெடிப்புகள் மற்றும் ஒளிரும் வானியல் பொருள் ஆகிய இரண்டையும் இணைக்கிறது.
மேலும் இதன் மூலம் ஆரம்பகால பிரபஞ்சத்தில் மிகப்பெரிய கருந்துளைகளின் விரைவான வளர்ச்சியைப் புரிந்துகொள்வதற்கான புதிய வழியை வழங்குகிறது என்று முதுகலை பட்டதாரியான Seiji Fujimoto கூறினார்.
உங்க வாட்ஸ்அப் பாதுகாப்பாக இருக்கா? இந்த 7 டிப்ஸ் உடனே செக் பண்ணுங்க
நீல்ஸ் போர் நிறுவனம், கோபன்ஹேகன் பல்கலைக்கழகம், ஒரு செய்தி அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பொருட்களைப் பற்றிய ஆராய்ச்சியானது, மிகப்பெரிய கருந்துளைகள் பற்றி விஞ்ஞானிகள் மேலும் புரிந்து கொள்ள உதவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil