/indian-express-tamil/media/media_files/2025/10/15/supermassive-black-holes-2025-10-15-18-00-08.jpg)
சூரியனை விட 18 பில்லியன் மடங்கு பெரிய ராட்சஸன்... ஈர்ப்பு அலைகளை உருவாக்கும் பிளாக்ஹோல் ஜோடி!
வானியல் வரலாற்றிலேயே முதல் முறையாக, தொலைதூரக் கேலக்ஸி ஒன்றில் சுற்றுப்பாதையில் சுழலும் 2 சூப்பர்மாசிவ் பிளாக்ஹோல்களைப் படம்பிடித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இந்த காட்சி, கருந்துளைகள் இன்னும் நாம் அறியாத மர்மமான வழிகளில் நடந்துகொள்ள கூடும் என்பதற்கான ஒரு துப்பைக் கொடுத்துள்ளது.
குவாசர் என்றால் என்ன? மர்மமான OJ 287 கேலக்ஸி!
படம் எடுக்கப்பட்ட இந்த கேலக்ஸி ஒரு குவாசர் (Quasar) ஆகும். இது அண்டத்திலேயே மிகவும் பிரகாசமான விண்மீன் மையங்களில் ஒன்றாகும். இதில் உள்ள OJ 287 எனப்படும் இந்தக் குவாசரின் சிறப்பு என்னவென்றால், இது 2 பிளாக்ஹோல்களை கொண்டுள்ளது. இந்தப் பெரிய மற்றும் சிறிய கருந்துளைகள் ஒவ்வோர் 12 ஆண்டுகளிலும் ஒரு முறை பிரம்மாண்டமான நடன அசைவுபோல ஒன்றை ஒன்று சுற்றி வருகின்றன. இந்தப் புதிய படத்தில், இந்த 2 பிளாக்ஹோல்களை அவற்றின் அதிக ஆற்றல் கொண்ட துகள்களின் நீளமான 'ஜெட்' ஓட்டங்களுடன் சேர்ந்து காட்சி அளிக்கின்றன. இது, இந்தக் கேலக்ஸிக்கு ஒரு இரட்டை மையம் இருக்கிறது என்ற நீண்டகாலக் கோட்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.
சூரியனுக்கு இணையான 'ராட்சஸ' அளவுகள்!
நாசாவின் தகவல்படி, இந்தக் காஸ்மிக் ஜோடியின் அளவுகள் நம் கற்பனைக்கு எட்டாதவை. இது நம் சூரியனைப் போல 18 பில்லியன் மடங்கு எடை கொண்டது. இது சுமார் 150 மில்லியன் சூரிய நிறைகளைக் கொண்டது. இந்தச் சிறிய பிளாக்ஹோல் அதன் பெரிய துணையின் தீவிர ஈர்ப்பு விசையில் சிக்கி, அங்கிருந்து வெளிப்படும் ஆற்றல் ஜெட் ஓட்டமானது, ஒரு சுழலும் தோட்டக் குழாயில் இருந்து நீர் பீய்ச்சி அடிப்பது போல சுழல் வடிவத்தில் காணப்படுகிறது. இந்தப் புதிய படத்தைப் பெற, விண்வெளியில் உள்ள RadioAstron தொலைநோக்கி மற்றும் பூமியில் உள்ள ஆய்வுக் கருவிகளின் கூட்டுப் பயன்பாடு உதவியது.
இந்த 2 பிளாக்ஹோல்களின் ஜெட் ஓட்டங்கள் எப்படி ஒன்றோடொன்று இடைவினை புரிகின்றன என்பதை ஆராய்வதன் மூலம், பிளாக் ஹோல் செயல்பாடுகள் குறித்து முக்கியமான தகவல்களை விஞ்ஞானிகள் கண்டறிய முடியும். மிக முக்கியமாக, இந்தச் சுழலும் நடனம் தான் ஈர்ப்பு அலைகளை (Gravitational Waves) உருவாக்குகின்றன. ஈர்ப்பு அலைகள் என்பது விண்வெளிக் காலத்திலேயே (Spacetime) ஏற்படும் அலைகள் அல்லது நெளிவுகள் ஆகும். இந்த இணைவுச் செயல்பாட்டின் நேரடிப் பதிவு, ஈர்ப்பு அலைகளை எப்படிச் சரியாகப் புரிந்துகொள்வது என்பதற்கு உதவலாம்.
இந்தக் கண்டுபிடிப்பு, 2 சூப்பர்மாசிவ் பிளாக்ஹோல் ஒன்றிணையும் நிகழ்வின் நேரடிப் பார்வையாகும். இது கேலக்ஸிகள் எவ்வாறு பரிணாமம் அடைந்து, இந்த அண்டத்தை வடிவமைக்கும் மாபெரும் சக்திகள் எங்கிருந்து உருவாகின்றன என்பதைப் பற்றிய புதிய கதவுகளைத் திறக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.