/tamil-ie/media/media_files/uploads/2022/04/Elephant-1.jpg)
சமீப காலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகளில் யானைகளின் இறப்பு கணிசமாக அதிகரித்து வருகின்றது. கடந்த 3 மாதங்களின் ஒன்பது யானைகள் கோவை வனக்கோட்டத்தில் மட்டும் உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் யானைகளின் மரணங்களுக்கான காரணங்களை பட்டியலிடம் அமைக்கப்பட்ட குழுவில் கால்நடை மருத்துவர்கள் மற்றும் கள ஆராய்ச்சியாளர்கள் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கால்நடை மருத்துவர்கள் யாரும் இல்லாமல் யானைகளின் மரணங்களுக்கான காரணங்களை இக்குழு பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
3 மாதங்களில் 9 யானைகள் பலி; கோவையில் தொடரும் அவலம்
கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் ஐ. அன்வர்தீன், செயல் திட்ட அதிகாரி சி.எச். பத்மா மற்றும் துணை வன பாதுகாவலர் ஜே.ஆர். சமர்தா உள்ளிட்ட மூன்று ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளுடன் ஓசை காளிதாஸ் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
முறையான அறிவியல் காரணங்களையும் இதர கூடுதல் காரணங்களையும் கண்டறிய யானைகள் குறித்த நிபுணத்துவம் பெற்ற ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இதில் இடம் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் எதற்காக இந்த கமிட்டி உருவாக்கப்பட்டதோ அந்த குறிக்கோள் எட்டப்படாமலே போய்விடும் என்று இயற்கை ஆர்வலர்கள் பலரும் தங்களின் கவலைகளை தெரிவித்துள்ளனர்.
ஆணி பிடுங்கும் திருவிழா – அசத்தும் தேனி ஆர்வலர்கள்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.