புவி வெப்பமயமாதலைத் தடுக்க சூரியனை மறைக்க திட்டம்: எலான் மஸ்க்கின் 'ஏலியன்' லெவல் சிந்தனை!

சூரிய சக்தியில் இயங்கும் ஏ.ஐ. செயற்கைக்கோள் கூட்டமைப்பு மூலம், பூமிக்கு வரும் சூரிய ஒளியின் அளவைச் சிறிது சரிசெய்து பூமியைக் குளிர்விக்க முடியும் என்று எலான் மஸ்க் யோசனை கூறியுள்ளார்.

சூரிய சக்தியில் இயங்கும் ஏ.ஐ. செயற்கைக்கோள் கூட்டமைப்பு மூலம், பூமிக்கு வரும் சூரிய ஒளியின் அளவைச் சிறிது சரிசெய்து பூமியைக் குளிர்விக்க முடியும் என்று எலான் மஸ்க் யோசனை கூறியுள்ளார்.

author-image
Meenakshi Sundaram S
New Update
fight climate change

புவி வெப்பமயமாதலைத் தடுக்க சூரியனை மறைக்க திட்டம்: எலான் மஸ்க்கின் 'ஏலியன்' லெவல் சிந்தனை!

செவ்வாய் கிரகத்தில் மனித காலனிகளை அமைப்பது, விண்வெளிப் பயணம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரும் எலான் மஸ்க், புவி வெப்பமயமாதல் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் ஒரு புதிய யோசனையைத் தனது எக்ஸ் (X) தளத்தில் திங்களன்று முன்மொழிந்துள்ளார்.

Advertisment

"ஒரு பெரிய, சூரிய சக்தியில் இயங்கும் ஏ.ஐ. செயற்கைக்கோள் கூட்டமைப்பு, பூமிக்கு வரும் சூரிய ஒளியின் அளவை மிகச் சிறியதாகச் சரி செய்வதன் மூலம், புவி வெப்பமயமாதலைத் தடுத்துவிட முடியும்," என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏற்கனவே சுமார் 9,000 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இந்த செயற்கைக்கோள் வானியலாளர்களின் ஆய்வுகளுக்கு இடையூறாக இருப்பதாக விமர்சனங்கள் உள்ள நிலையில், மஸ்க் இந்த புதிய ஏ.ஐ. செயற்கைக்கோள் திட்டத்தைப் பற்றிப் பேசியுள்ளார்.

ஒரு ரசிகர், "இத்திட்டம் பூமியின் காலநிலையைச் சீர்குலைக்காதா? இவ்வளவு சக்திவாய்ந்த 'சுவிட்ச்' யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கும்? இதனால் நாடுகளுக்குள் போர் வராதா?" என்று அடுக்கடுக்கான கேள்ிகளை எழுப்பினார். இந்தக் கேள்விகளுக்கு எலான் மஸ்க் சுருக்கமாக "ஆம்" என்று பதிலளித்தார். மேலும் அவர் விளக்கியபோது, "புவி வெப்பமயமாதலைத் தடுக்க மிகச் சிறிய சரிசெய்தல் போதும். பூமி இதற்கு முன் பலமுறை பனிப்பந்தாக உறைந்து போயிருக்கிறது," என்றும் குறிப்பிட்டார்.

Advertisment
Advertisements

சூரிய ஒளியை செயற்கையாக மறைத்து பூமியைக் குளிர்விக்கும் இந்த ஐடியாவிற்கு 'சோலார் ஜியோ இன்ஜினியரிங்' (Solar Geoengineering) என்று பெயர். இது விஞ்ஞான சமூகத்தில் நீண்ட காலமாக விவாதிக்கப்படும் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகும்.

பெரும்பாலான விஞ்ஞானிகள், "இது தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியம்தான். ஆனால், நம்ப முடியாத அளவிற்கு ஆபத்து நிறைந்தது," என்று கருதுகின்றனர். ஒரு கிரகத்தின் காலநிலை என்பது மிகவும் சிக்கலான அமைப்பு. சூரிய ஒளியை இவ்வாறு தடுத்தால், அது பல எதிர்பாராத பக்க விளைவுகளை (Unintended Consequences) ஏற்படுத்தும் என்றும், ஒருமுறை இந்த அமைப்பைச் செயல்படுத்திவிட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளைத் திரும்பப் பெற முடியாது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இது வேறு வழியே இல்லாதபோது கையாள வேண்டிய ஒரு அவசர கால நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. விஞ்ஞானிகள் 'கடல் மேகங்களை ஒளிரச் செய்தல்' (Marine cloud brightening) அல்லது வளிமண்டலத்தில் 'சல்பர் துகள்களைத் தூவுதல்' (Stratospheric aerosol injection) போன்ற முறைகளையே மிகவும் எச்சரிக்கையுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.

மஸ்க்கின் இந்தத் திட்டம், ஒரு 'சர்வாதிகார' AI செயற்கைக்கோள் கூட்டமைப்பைப் பற்றிப் பேசுவதாக விமர்சனங்கள் எழுந்தாலும், மஸ்க் இதனை வேறு கோணத்தில் அணுகுகிறார். ஒரு ரசிகர், "இது 'கர்தாஷேவ் வகை II' (Kardashev Type II) நாகரிகம் செய்யக்கூடிய செயல்," என்று குறிப்பிட்டார். (ஒரு நட்சத்திரத்தின் முழு சக்தியையும் கட்டுப்படுத்தக்கூடிய அதி-மேம்பட்ட நாகரிகம்). அதற்கு மஸ்க், "ஆம். அது அத்துடன் இயல்பாகவே வரக்கூடியது," (Comes with the territory) என்று பதிலளித்து, தனது ஸ்டார்லிங்க் திட்டங்கள் அத்தகைய உயர்நிலை நாகரிகத்தை நோக்கிய ஒரு 'பாதை' என்பதை மீண்டும் சூசகமாகத் தெரிவித்தார்.

Science

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: