டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர், சமீபத்தில் ட்விட்டரை வாங்கிய கோடீஸ்வரரான எலான் மஸ்க் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) என்ற தனியார் விண்வெளி அமைப்பின் உரிமையாளராவார். ஸ்பேஸ்எக்ஸ் நாசாவின் உதவியுடன் செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. பல விண்வெளி திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், ஸ்டார்ஷிப் (Starship) என்ற ராட்சத ராக்கெட் அமைப்பை அடுத்த மாதம் முதன்முறையாக சுற்றுப்பாதைக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் தனது அடுத்த தலைமுறை ராக்கெட் அமைப்பை டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு அனுப்ப உள்ளது. அங்கு தரையிறங்கும் முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தளத்திலிருந்து முன்பு ஸ்டார்ஷிப் 10 கிமீ உயரத்தில் மட்டும் செயல்படுத்தப்பட்டது.
இப்போது டிசம்பர் திட்டத்தில் ராக்கெட்டின் முழு அமைப்பும் சோதிக்கப்பட உள்ளது. 160 அடி 50 மீட்டர்
உயர ராக்கெட் 230 அடி 70 மீட்டர் சூப்பர் ஹெவி பூஸ்டரை ஆகியவை உள்ளடக்கி விண்ணுக்கு செலுத்தி சோதிக்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஸ்பேஸ்எக்ஸ் தாக்கல் செய்த ஒழுங்குமுறை ஆவணங்களின்படி, சூப்பர் ஹெவி பூஸ்டர் நிலத்திற்குத் திரும்பும். அதே நேரத்தில் ஸ்டார்ஷிப் விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் 90 நிமிடங்களுக்குப் பிறகு நுழையும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வர்த்தக வெளியீட்டு தள பாதுகாப்பை மேற்பார்வையிடும் அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கான உரிமத்தை இன்னும் வழங்கவில்லை எனக் கூறியுள்ளது. ஸ்பேஸ்எக்ஸுக்கு உரிமம் வழங்குவதை எப். ஏ.ஏ தீர்மானிக்கும்.
ஸ்பேஸ்எக்ஸ் அனைத்து நிலுவைத் தகவல்களையும் வழங்கிய பின்னர், ஏஜென்சி அதை முழுமையாக ஆய்வு செய்து பின்னர் வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டு நாசா- ஸ்பேஸ்எக்ஸ் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில் 2025-ம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டத்திற்கு ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் ராக்கெட் பெற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil