எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய ராக்கெட், ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை முயற்சி நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிலையில் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களில் ராக்கெட் நடுவானில் வெடித்து மெக்சிகோ வளைகுடா கடலில் விழுந்தது.
Advertisment
ஸ்டார்ஷிப் ராக்கெட் கிட்டத்திட்ட 400 அடி (120-மீட்டர்) உயரம் மற்றும் 33 என்ஜின்களை கொண்டுள்ள Stainless steel அமைப்பாலான ராக்கெட் ஆகும். டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளித் தளமான ஸ்டார்பேஸில் இருந்து ஸ்டார்ஷிப் ஏவப்பட்ட 4 நிமிடங்களில் ராக்கெட் வெடித்தது. சோதனை முயற்சி என்பதால் செயற்கைக் கோள்களோ, மனிதர்களையோ அதில் அனுப்பபட வில்லை.
பூஸ்டர் நிலை பிரிக்கப்பட வில்லை
ஸ்பேஸ்எக்ஸ் அதிகாரிகள் கூறுகையில், "ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களில் பூஸ்டர் பகுதி பிரிக்கப் பட வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ராக்கெட் கீழே விழ ஆரம்பித்தது. ஏவப்பட்ட 4 நிமிடங்களில் வெடித்து வளைகுடாவில் விழுந்தது" என்று கூறினர்.
ராக்கெட் ஏவுதலைக் காண போகா சிகா பீச் ஏவுதளத்திலிருந்து பல மைல்கள் தொலைவில் உள்ள சவுத் பேட்ரே தீவில் ஏராளமான மக்கள் குவிந்தனர். ராக்கெட் புறப்பட தயாரான உடன் மக்கள் கூச்சலிட்டனர். "Go, baby, go" என கூச்சலிட்டனர். ஸ்டார்ஷிப் சக்தி வாய்ந்த மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ராக்கெட்டாக தயாரிக்கப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்களை சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சோதனை முயற்சி தோல்வியடைந்த நிலையில், "தோல்வியில் பாடங்களை கற்று மேம்படுத்துவோம் வெற்றி பெறுவோம்" என எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நம்பிக்கை ட்விட்டர் பதிவிட்டுள்ளது.
முன்னதாக கடந்த திங்கட்கிழமை சோதனை மேற்கொள்ள இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil