ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA)விண்வெளி தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. அந்தவகையில் சோலார் ஆர்பிட்டர் திட்டத்தை ஏஜென்சி செயல்படுத்தி வருகிறது. சோலார் ஆர்பிட்டர் சூரியன் மற்றும் "விண்வெளி வானிலை" பற்றி ஆய்வு செய்து வருகிறது.
இந்தநிலையில் சோலார் ஆர்பிட்டர் இன்று அதிகாலை 12.42 மணியளவில் சூரியனை நெருங்கி அதனை படம் பிடித்து அனுப்பியுள்ளது. அந்த படம் பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளது. சூரியன் பிரகாசமாக காணப்படுகிறது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது.
சோலார் ஆர்பிட்டர் இதற்கு முன்பும் சூரியனை படம் பிடித்து அனுப்பியுள்ளது. சோலார் ஆர்பிட்டர் விண்கலத்தில் உள்ள எக்ஸ்ட்ரீம் அல்ட்ரா வயலட் இமேஜர் (EUI) மூலம் full Sun mode என்ற அம்சத்தைப் பயன்படுத்தி 17 நானோமீட்டர் அலைநீளத்தில் சூரியனை படம் எடுத்துள்ளது. ஒரு மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வெளியிடப்பட்டது என்று கூறிப்பட்டுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி கூறுகையில், இந்தப் படத்தில், வண்ணங்கள் செயற்கையாக சேர்க்கப்பட்டுள்ளன. ஏனெனில் ஒளியின் அசல் அலைநீளம் (original wavelength of the light) மனிதர்களின் கண்ணுக்கு புலப்படாது என்பதால் விண்கலத்தின் தரவுகளை கொண்டு படத்தில் வண்ணங்கள்
செயற்கையாக சேர்க்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.
சோலார் ஆர்பிட்டர் திட்டம், சூரியன் மற்றும் "விண்வெளி வானிலை" பற்றி விஞ்ஞானிகள் புரிந்துகொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. விண்வெளி வானிலை தரவுகள் கொண்டு பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்களை பாதுகாப்பாக இயக்க உதவுகிறது. மேலும் தகவல்தொடர்புகளுக்கு பாதுகாப்பாக உள்ளது என ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil