European Space Agency chooses team to make oxygen on the moon: வெற்றி பெரும் தொழில் நிறுவனத்தை, நிலவின் மண்ணான ரெகோலித்திக்கில் இருந்து ஆக்ஸிஜனை எடுக்கும் பணிக்கு பணியமர்த்துவோம் என்று ஐரோப்பிய விண்வெளி கழகம் அறிவித்துள்ளது. இங்கிலாந்தை தலைமையகமாக கொண்ட தாலெஸ் அலேனியா நிறுவனத்தின் தலைமையில் இந்த குழு செயல்பட உள்ளது. சந்திரனில் ஆக்ஸிஜனை உருவாக்கும் ஆலைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய சூரிய சக்தியில் இயங்கும் முன்மாதிரி சாதனத்தை தயாரிக்கும் பணியில் இந்த குழு ஈடுபட்டு வருகிறது.
இது ஆக்ஸிஜன் உற்பத்தியில் உதவுவதோடு ராக்கெட் உந்து சக்தியாகவோ அல்லது விண்வெளி ஆராய்ச்சியாளார்கள் சுவாசிக்கவோ பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த குழுவால் கைக்கு அடக்கமாக உருவாக்கப்பட்ட இந்த சாதனம் சந்திரனின் ரெகோலெதிக் மண்ணில் இருந்து 50 முதல் 100 கிராம் வரையில் ஆக்ஸிஜனை எடுக்க வேண்டும். ஆய்வுக்காக எடுத்துவரப்பட்ட நிலவின் மண்ணில் இருக்கும் 70% ஆக்ஸிஜனை இவ்வாறு பிரித்தெடுக்க வேண்டும் என்பதே இதன் பணியாகும். இந்த பணியை வெறும் 10 நாட்களுக்குள் அதாவது தேய்பிறையின் முதல் நாள் துவங்கி அம்மாவாசை இரவுக்குள் எடுக்க வேண்டும். ஏன் என்றால் இந்த நாட்களில் மட்டுமே சூரிய வெளிச்சம் நிலவில் கிடைக்கக் கூடும்.
இந்த பேலோட் அளவில் மிகவும் சிறியதாக இருக்க வேண்டும் அதே சூழலில் நிலவின் மேற்பரப்பில் பல்வேறு இடங்களுக்கு, ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் லேண்டரான இ.எல்.3க்கும் இது பயணிக்க வேண்டும்.
ஏவிஎஸ், மெட்டாலிசிஸ், ஓபன் யுனிவர்சிட்டி மற்றும் ரெட்வயர் ஸ்பேஸ் ஐரோப்பாவைக் கொண்ட வின்னிங் டீம் மூன்று போட்டி வடிவமைப்புகள் உட்பட விரிவான ஆய்வை நடத்திய பிறகு, 2021 இல் ESA-இன் மனித மற்றும் ரோபோடிக் ஆய்வு இயக்குநரகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஏற்கனவே நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் நிலவின் லூனார் ரெகோலித் பரப்பில் அதன் எடையில் 40 முதல் 45% ஆக்ஸிஜன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது பிரச்சனை என்னவென்றால், மற்ற கனிமங்களுடன் ஒன்றாக சேர்ந்து இருப்பதால் தற்போது ஆக்ஸிஜனை பிரித்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில், ESA ஆனது நெதர்லாந்தை தளமாகக் கொண்ட ESTEC, ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மையத்தின் பொருட்கள் மற்றும் மின் கூறுகள் ஆய்வகத்தில் ஒரு முன்மாதிரி ஆக்ஸிஜன் ஆலையை அமைத்தது. ரெகோலித்தில் இருந்து ஆக்ஸிஜனைப் பிரித்தெடுக்க ஆய்வகம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil