ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, கிழக்கு திமோர் மற்றும் பிற பகுதிகளில் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி அரிய வகை ஹைபிரிட் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. பொதுவாக, சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன, அந்த வகையில் தற்போது மே 5, 2023 அன்று பெனும்பிரல் சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
Advertisment
சூரிய கிரகணத்தைப் போல் அல்லாமல் இந்த சந்திர கிரகணம் இந்தியாவிலும் தெரியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பெனும்பிரல் சந்திர கிரகணம் எப்போது, எந்த நேரத்தில் நிகழும்?
இந்திய நேரப்படி பெனும்பிரல் சந்திர கிரகணம் மே 5-ம் தேதி இரவு 8.45 மணி மற்றும் மே 6-ம் தேதி அதிகாலை 1.02 மணி இடையே நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சந்திரன் பூமியின் நிழலைக் கடந்து செல்லும் போது, இதன் விளைவாக சந்திர கிரகணம் நிகழ்கிறது என்று இன் தி ஸ்கை தெரிவித்துள்ளது.
சந்திரனுடன் ஒப்பிடும்போது பூமி மிகப் பெரியது. அதனால் அதன் நிழலும் பெரியதாக உள்ளது. இதன் காரணமாக சூரிய கிரகணத்தை விட சந்திர கிரகணங்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும், பரந்த பகுதிகளிலும் தெரிகிறது.
மே 5 சந்திர கிரகணம் அண்டார்டிகா, ஆசியா, ரஷ்யா, ஆப்பிரிக்கா மற்றும் ஓசியானியா ஆகிய பகுதிகளில் காண முடியும்.
டெல்லியில் பெனும்பிரல் சந்திர கிரகணம் தென்கிழக்கு பகுதியில் தெரியும், இரவு 10.45 மணியளவில் அங்கு சந்திர கிரணம் தெரிய வாய்ப்பு உள்ளது.
வெறும் கண்களால் பார்க்கலாமா?
பெனும்பிரல் சந்திர கிரகணங்கள் பொதுவாக மிகவும் குறைவான நிகழ்வே ஆகும். நீங்கள் ஏதேனும் கருவி கொண்டு பார்க்க வேண்டும். ஆனால் சூரிய கிரகணம் போலல்லாமல், சந்திர கிரகணங்களை வெறும் கண்களால் பார்க்கலாம். இருப்பினும் கருவிகளாலும் பார்ப்பது பாதுகாப்பானது. கருவி கொண்டு பார்த்தால் நிகழ்வு நன்றாக தெரியும். கிரகணத்தை பைனாக்குலர், டெலஸ்கோப் கொண்டு பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“