அபெர்டீன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் 18 வயது மாணவி அனஸ்டியா மேயர்ஸ், ரிச்சர்ட் ப்ரான்சன் நிறுவிய விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் இரண்டாவது வணிக விமானத்தில் செல்வதற்காக பரிசு டிராவில் வெற்றி பெற்ற பிறகு, தனது தாய் கெய்ஷா ஷாஹாஃப் உடன் விண்வெளிக்குச் செல்ல உள்ளார். தாய்-மகள் இருவரும் கரீபியனில் உள்ள ஆன்டிகுவா மற்றும் பர்புடாவை சேர்ந்தவர்கள்.
ஷாஹாஃப் நிதி திரட்டல் போட்டியின் மூலம் இரண்டு டிக்கெட்டுகளை வெற்றார். அங்கு வருமானம் ஸ்பேஸ் ஃபார் ஹ்யூமனிட்டிக்கு சென்றது. ஷாஹாஃப் வெற்றி பெற்றபோது, பிரான்சன் ஆண்டிகுவாவில் உள்ள அவரது வீட்டிற்கு திடீர் பயணம் செய்து இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டார். கல்லூரி தத்துவம் மற்றும் இயற்பியல் மாணவியான அவரது இளைய மகள் மேயர்ஸை அவருடன் இணைந்து செல்ல அவர் தேர்ந்தெடுத்தார். விண்வெளிக்கு செல்லும் முதல் அம்மா-மகள் ஜோடி என்ற பெருமையைத் தவிர ஆன்டிகுவா மற்றும் பர்புடாவைச் சேர்ந்த முதல் விண்வெளி வீரர்கள் என்ற பெருமையையும் இவர்கள் பெறுகின்றனர்.
“அபெர்டீன் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான விசாவைப் பெறுவதற்காக நாங்கள் வேறொரு கரீபியன் தீவுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, 2021ஆம் ஆண்டு போட்டியைப் பற்றி என் அம்மா அறிந்தார். இதற்காக நாங்கள் ஒரு த்ரில்லிங் வேலையை செய்தோம். எனவே ஒரு மணி நேர விமானத்திற்கு பதிலாக, லண்டன் வழியாக 16 மணிநேரம் சென்று பின்னர் கரீபியனுக்கு திரும்பினோம் ”என்று மேயர்ஸ் கூறினார்.
மேலும் பேசிய அவர், அம்மா என்னிடம் விண்வெளி பயணத்தில் வெற்றி பெற்றதாக கூறினார். நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். மகிழ்ச்சியில் என்னால் பேச முடியவில்லை. நான் இதில் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஆனால் கடைசியில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம். இன்னும் அதை என்னால் நம்ப முடியவில்லை என்றார்.
இந்த விண்வெளிப் பயணம் சிறப்பானதோரு பயணமாக இருக்கும். பல எல்லைகளை தாண்டுகிறது. விர்ஜின் கேலக்டிக் அடுத்த பயணம் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. மேலும் மிகக் குறைந்த வயதில் விண்வெளிக்கு செல்லும் நபர் என்ற பெருமையை மேயர்ஸ் பெறுகிறார். மேயர்ஸ் மற்றும் ஷாஹாஃப் ஆகியோருடன் முன்னாள் பிரிட்டிஷ் ஒலிம்பியன் ஜான் குட்வின் பயணத்தில் இணைகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“