/indian-express-tamil/media/media_files/2025/08/18/mayilsamy-annadurai-2025-08-18-11-13-07.jpg)
இனிவரும் காலங்களில் மனிதனுக்கு மனிதன் எதிர்த்து நின்று போராடும் நிலை இருக்காது. நடந்து முடிந்த போரே அதற்கு சாட்சி,500 மீட்டர் தொலைவில் இருந்து போராடும் அளவிற்கு அறிவியல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை சிவகாசியில் பேட்டி அளித்துள்ளார்.
சிவகாசியில் உள்ள தனியார்(ஸ்ரீ காளீஸ்வரி) கல்லூரியில் தமிழ்நாடு வானியல் விண்வெளி ஆராய்ச்சி கழகம் பெங்களூரு, இந்திய வானியல் நிறுவனம் சென்னை, தமிழ்நாடு கணித அறிவியல் நிறுவனம்,தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கழகம்,ராமன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை சார்பில் மாநில அளவிலான இளைஞர் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் 3 நாள் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிருமிருந்து 600 க்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரி ஆய்வு மாணவ,மாணவிகளும் வானியல் விஞ்ஞானிகள் பலரும் கலந்துகொண்டனர்.
நிறைவுநாள் நிகழ்வில் கலந்து கொண்ட இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாத்துரை, அறிவியல் மாநாட்டில் நடைபெற்ற இ-கன்டென்ட் டெவலப் மென்ட், சிறந்த ஆய்வு கட்டுரை மற்றும் சிறந்த குறும்படம், சிறந்த படைப்பாற்றல், சிறந்த அறிக்கை தயாரிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் நினைவு பரிசுகளையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சந்திராயன் 4ல் மனிதர் செல்லும் திட்டமில்லை, ஆளில்லா விண்கலமாக திட்டமிடப்பட்டுள்ளது.
ககன்யான் விண்கலத்தில் மனிதர்கள் செல்வார்கள் என்றும் அரசு மட்டுமே அறிவியல் ஊக்கத்தை கொடுக்க முடியுமா என்ற கேள்வி தற்போது உள்ள அரசுத் துறையை தாண்டி தனியார் துறைகளின் பங்களிப்பும் 70 சதவீதம் அளவிற்கு உள்ளது என்றார். அனைத்து துறைகளிலும் தனியார் துறையின் பங்களிப்பு உள்ளது போல ஆராய்ச்சி துறையிலும் தனியாரின் பங்களிப்பு அவசியமாகிறது என்றும் விண்வெளி ஆராய்ச்சியை பொறுத்தவரை இந்தியா என்றைக்கும் நான்காவது இடத்திற்கு கீழ் செல்லப்போவதில்லை என்றார்.
மனிதனை மட்டும் நாம் இதுவரை விண்ணிற்கு அனுப்பியதில்லை என்பதில் மட்டும்தான் நாம் பின்தங்கியுள்ளோம் மேலும் செயற்கைக்கோள்களை மிகக் குறைந்த செலவில் வெற்றி அடைந்ததில் நம் நாடு இரண்டு, மூன்றாவது இடத்திற்குள் உள்ளது என்றார். இளம் தலைமுறைகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கு இன்றைய இளம் தலைமுறையினர் தயாராக உள்ளார்கள், ஆண் பெண் சரிசமமாக வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள தயாராக உள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 2 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் என நம்பிக்கை தெரிவித்த மயில்சாமி அண்ணாதுரை, தேவையான கட்டுமானங்கள் அங்கு உருவாக்கப்பட வேண்டும், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய மாற்றத்தை தென் தமிழகம் உருவாக்கும் என்றார். தற்போதைய அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக மனிதனுக்கு மனிதன் எதிர்த்து நின்று போராட வேண்டிய தேவை இருக்காது, 500 மீட்டர் தொலைவில் நின்று போராட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது, அதற்கு நடந்து முடிந்த போரே சாட்சி எனவே அதற்கு ஏற்றவாறு அறிவியல் தொழில்நுட்பத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.