பூமியில் டைனோசர்கள் தோன்றுவதற்கு 4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சதுப்பு நில காடுகளில் வேட்டையாடும் திறன் கொண்ட ஒரு உயிரினம் வாழ்ந்துள்ளது.
சாலமண்டர் வகை உயிரினம்
இந்த உயிரினம் 2 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது. இந்த உயிரினத்தின் மண்டை ஓடு மட்டுமே சுமார் அரை மீட்டர் நீளம் இருந்துள்ளது. இந்த உயிரினத்துக்கு ஆராய்ச்சியாளர்கள் கெய்சியா ஜென்னியே எனப் பெயரிட்டுள்ளனர்.
மேலும் இந்த உயிரினம் சாலமண்டர் (salamander) வகையை சேர்ந்தது எனவும் தெரியவந்துள்ளது. சாலமண்டர் என்பது பல்லி போன்ற உயிரினம் ஆகும். இது நீர் மற்றம் நிலத்தில் வாழக்கூடியது.
தற்போது இந்த உயிரினங்கள் உலகில் இல்லை. இந்த உயிரினங்களின் புதை படிவங்கள் 2015ஆம் ஆண்டு நமீபியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினாவின் ப்யூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள கிளாடியா மார்சிகானோ இந்த உயிரினம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
280 மில்லியன் ஆண்டுகள்..
இது குறித்து பேசிய கிளாடியா மார்சிகானோ, “அது ஒரு முதலையைப் போல வேட்டையாடியிருக்கலாம், இரையை அருகில் கடந்து செல்வதற்காகக் காத்திருக்கும்” என்றார். மேலும், “மிகவும் நீளமான உடலைக் கொண்ட ஒரு நீர்வாழ் விலங்காக இருந்தது, இது ஒரு விலாங்கு போல நீந்தியது, மிகக் குறைந்த கால்களுடன், வறண்ட நிலத்தில் நகர்ந்தது” என்றார்.
இந்த கண்டுபிடிப்பு ஆரம்பகால டெட்ராபாட் விநியோகம் பற்றிய நமது புரிதலை மறுசீரமைக்கிறது. 280 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமத்திய ரேகையை மையமாகக் கொண்டு வெப்பமண்டல காலநிலையைக் கொண்டிருந்த வடக்கு அரைக்கோளத்தில் பெரும்பாலான டெட்ராபோட் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“