Advertisment

செவ்வாய் கிரகத்தில் காணப்படும் கயிறு போன்ற பொருள்.. ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு!

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட நாசாவின் ரோவர் மெல்லிய கயிறு போன்ற ஒரு பொருளை படம் பிடித்து அனுப்பியுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
செவ்வாய் கிரகத்தில் காணப்படும் கயிறு போன்ற பொருள்.. ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு!

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆதி பிரபஞ்சத்தின் ஒளியைப் படம் பிடித்து அனுப்பியது. இதுவரை பிரபஞ்சம் அவ்வளவு துல்லியமாக, ஆழமாக படம் பிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இவ்வாறு பல்வேறு சாதனைகளை நாசா செய்து வருகிறது.

Advertisment

அந்தவகையில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட நாசாவின் ரோவர் அரிய வகை பொருளை படம் பிடித்துள்ளது. மெல்லிய கயிறு போன்ற ஒரு பொருளை படம் பிடித்து அனுப்பியுள்ளது. அந்தப்படத்தில், இரண்டு பாறைகளுக்கு இடையில் அந்தப் பொருள் உள்ளது. ஜூலை 12அன்று Perseverance Rover's Front Left Hazard Avoidance Camera A மூலம் படம் பிடித்து அனுப்பபட்டுள்ளது.

publive-image

நாசா அந்த பொருள் என்னவாக இருக்கும் என எந்த தகவலையும் கூறவில்லை. இருப்பினும் இது, விண்வெளி குப்பையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது போன்ற குப்பைகள் மற்றொரு கிரகத்தில் காணப்பட்டது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஜூன் மாதம், செவ்வாய் கிரகத்தில் ஒரு பளபளப்பான பொருளை ரோவர் படம் பிடித்து அனுப்பியது. அதை ஆய்வுக்கு உட்படுத்திய பின், அது தெர்மல் பிளாங்கெட்டின் பகுதி எனத் தெரியவந்தது. வெப்பநிலையைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் பொருள் எனக் கண்டறியப்பட்டது.

Technology Science Nasa Research
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment