மனித உடல் முதல் மர இலைகள் வரை... தங்கம் காணப்படும் 5 ஆச்சரியமூட்டும் இடங்கள்!

தங்கம் என்றாலே, அது ஆழமான சுரங்கங்களிலோ அல்லது ஆற்றுப் படுகைகளிலோ மட்டுமே மறைந்திருக்கும் ஒரு உலோகம் என்றுதான் நாம் கற்பனை செய்கிறோம். ஆனால், நீங்க சற்றும் நம்பமுடியாத, மிக ஆச்சரியமூட்டும் இடங்களிலும் தங்கம் காணப்படுகிறது. 

தங்கம் என்றாலே, அது ஆழமான சுரங்கங்களிலோ அல்லது ஆற்றுப் படுகைகளிலோ மட்டுமே மறைந்திருக்கும் ஒரு உலோகம் என்றுதான் நாம் கற்பனை செய்கிறோம். ஆனால், நீங்க சற்றும் நம்பமுடியாத, மிக ஆச்சரியமூட்டும் இடங்களிலும் தங்கம் காணப்படுகிறது. 

author-image
Meenakshi Sundaram S
New Update
Human body Gold is found

மனித உடல் முதல் மர இலைகள் வரை... தங்கம் காணப்படும் 5 ஆச்சரியமூட்டும் இடங்கள்!

தங்கம் என்றாலே, அது ஆழமான சுரங்கங்களிலோ அல்லது ஆற்றுப் படுகைகளிலோ மட்டுமே மறைந்திருக்கும் ஒரு உலோகம் என்றுதான் நாம் கற்பனை செய்கிறோம். ஆனால், நீங்க சற்றும் நம்பமுடியாத, மிக ஆச்சரியமூட்டும் இடங்களிலும் தங்கம் காணப்படுகிறது. 

Advertisment

1. மனித உடல்

நம் உடலிலேயே தங்கம் உள்ளது. சராசரி மனித உடலில் சுமார் 0.2 மில்லிகிராம் தங்கம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது நமது ரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவியுள்ளது. உடலில் மின் சமிக்ஞைகளைக் (electrical signals) கடத்துவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, மூட்டு ஆரோக்கியம் மற்றும் நரம்பு இணைப்புகளைக் கட்டுப்படுத்தும் செல்களில் இந்த உலோகம் காணப்படுகிறது. தங்கம் செல்வத்தின் அடையாளமாக மட்டுமல்லாமல், இயற்கையிலும், உயிரினங்களின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.

2. கடல் நீர்

பெருங்கடல்களில் சுமார் 20 மில்லியன் டன் தங்கம் கரைந்த நிலையில் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், இது மிகவும் நீர்த்த நிலையில் (too diluted) உள்ளது, அதாவது தண்ணீரின் அளவுடன் ஒப்பிடும்போது தங்கத்தின் அளவு மிக மிகக் குறைவு. இதனால், லாபகரமான முறையில் தங்கத்தைப் பிரித்தெடுப்பது தற்போதைக்குச் சாத்தியமற்றதாக உள்ளது. பல நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகள் இதற்கான முறைகளைக் கண்டுபிடிக்க முயன்றும், பிரித்தெடுக்கும் செலவு மிக அதிகமாகவே உள்ளது. ஆனாலும், கடலில் மிதக்கும் இந்த "திரவத் தங்கம்" பற்றிய யோசனை, ஆய்வாளர்களையும் விஞ்ஞானிகளையும் தொடர்ந்து கவர்ந்திழுக்கிறது.

3. விண்கற்கள் (Meteorites)

விண்கற்கள் பூமிக்குத் தங்கத்தைக் கொண்டு வருகின்றன. உண்மையில், பல 100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, நமது கிரகத்தில் இருக்கும் தங்கத்தின் பெரும்பகுதி இப்படி விண்கற்கள் மூலமாக வந்தடைந்தவைதான் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். சில சிறுகோள்கள் (Asteroids) மிக அதிக அளவிலான விலைமதிப்பற்ற உலோகங்களைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக, எதிர்கால வள ஆதாரமாக "விண்வெளிச் சுரங்கம்" (Space Mining) தோண்டி எடுப்பது குறித்த ஆர்வம் விஞ்ஞானிகளிடையே அதிகரித்து வருகிறது.

Advertisment
Advertisements

4. எரிமலைகள்

எரிமலைகள், புவிவெப்ப செயல்முறைகள் (geothermal processes) மூலம் அதிகளவில் தங்கத்தை உருவாக்கும் திறன் கொண்டவை. இந்த செயல்பாட்டில், பூமிக்கு அடியில் உள்ள சுடுநீர், உலோகங்களைக் கரைத்து, பூமிக்கு அருகில் மேற்பரப்புக்கு வரும்போது அவற்றை மீண்டும் படிய வைக்கிறது. இது தங்கத் தாதுக்கள் நிறைந்த நரம்புகளை (gold-rich veins) உருவாக்குகிறது. நியூசிலாந்து போன்ற நாடுகள், இத்தகைய எரிமலை தங்க ஆதாரங்களால் நீண்ட காலமாகப் பயனடைந்து வருகின்றன.

5. தாவரங்கள்

யூக்கலிப்டஸ் (Eucalyptus), நார்வே ஸ்ப்ரூஸ் (Norway spruce) போன்ற தாவரங்களில் மிக நுண்ணிய தங்கத் துகள்கள் (microscopic particles) காணப்படுகின்றன. இவை, மண்ணிலிருந்து தங்கள் வேர்கள் மூலம் தங்கத்தை உறிஞ்சுகின்றன. தாவரங்களின் வேர்கள் தங்கம் உள்ள பாறைகளைத் தொடும்போது, அந்தத் தாவரம் சிறிய தங்கத் துகள்களைத் தனது வேர் அமைப்பு (vascular system) மூலம் கடத்தி, இலைகளில் சேமித்து வைக்கிறது. சமீபத்திய ஆராய்ச்சியில், நுண்ணுயிரிகள் (microbes) கூட இந்தத் தங்கத்தை நானோ துகள்களாக மாற்றி, தாவர திசுக்களுக்குள் நிலைநிறுத்த உதவக்கூடும் என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும், இந்தச் செயல்முறை பெரிய அளவிலான சுரங்கத் தொழிலுக்குப் பொருளாதார ரீதியாகப் பயனுள்ளதாக இல்லை.

Science

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: