கடந்த 3,000 ஆண்டுகளுக்கு முன்பே தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மூளையில் ஏற்பட்ட வீக்கத்தை சரி செய்வதற்காக மண்டை ஓட்டில் அறுவை சிகிச்சை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனை உயிர் தொல்பொருள் ஆய்வாளர் டயான சிம்ப்சன் தெரிவித்தார். முன்னதாக, லாஸ் வேகாஸ் நகரில் நெவாடா பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஆண்டு கூடட்த்தில் இந்த ஆய்வறிக்கையை டயானா சமர்ப்பித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
வட ஆப்பிரிக்காவில் 13,000 ஆண்டுகளுக்கு முன்பே தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
வட அமெரிக்காவில் 3,000 முதல் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபர், அதன் பிறகு ஓராண்டு வரை உயிர் வாழ்ந்திருக்கலாம் என்று தெரிகிறது.
Whatsapp update: இனி Contact list-ல இல்லாத நம்பருக்கும் மெசேஜ் அனுப்பலாம்
அவரது கல்லறையில் சுமார் 3,000 முதல் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வட அமெரிக்க வேட்டையாடும் பொருட்கள் கிடைத்தன.
அவருடன் புதைக்கப்பட்ட சடங்கு பொருட்களில் கூர்மையான எலும்பு மற்றும் பச்சை குத்திக் கொள்வதற்கான கருவிகள் ஆகியவை கிடைத்தன.
லிட்டில் பியர் க்ரீக் தளத்தில் உள்ள கல்லறையில் 162 பேரின் உடல்களை எடுத்தனர். மனிதனின் அருங்காட்சியகத்தில் வைத்திருந்த எலும்புக்கூடு மற்றும் கல்லறை பொருட்களை சிம்ப்சன் 2018 இல் ஆய்வு செய்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil