நுண்ணுயிர் எதிர்ப்பிகளிலிருந்து மனித செரிமான மண்டலத்தின் இயற்கையான நுண்ணியிரிகளை பாதுகாக்கவும், நுண்ணுயிர் எதிர்ப்பின் தோற்றத்தைத் தடுக்கவும் உதவும் பாக்டீரியாக்களின் திரிபுகளை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
நுண்ணுயிர் எதிரிகள் (Antibiotics) உயிர் காக்கும் மருந்துகள். ஆனால் அவை மனித குடலில் வாழும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளுக்கும் தீங்கு விளைவிக்கும். ஆண்டிபயாடிக் சிகிச்சையைத் தொடர்ந்து, சில நோயாளிகள் அழற்சி அல்லது க்ளோஸ்ட்ரிடியோட்ஸ் டிஃபிசில் போன்ற நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயத்தில் உள்ளனர்.
நுண்ணுயிர் எதிரிகளின் கண்மூடித்தனமான பயன்பாடு குடல் நுண்ணுயிரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அந்த அபாயங்களைக் குறைக்கும் முயற்சியில், மனித செரிமான மண்டலத்தின் இயற்கையாக உருவாகும் நுண்ணியிரிகளை பாதுகாக்க உதவும் புதிய வழியை இங்கிலாந்து உள்ள மாசாசூட்ஸ் தொழில்நுட்ப நிறுவன பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
அவர்கள் மனித நுகர்வுக்கு பாதுகாப்பான பாக்டீரியாக்களின் திரிபுகளை எடுத்து, பீட்டா-லாக்டாம்கள் எனப்படும் நுண்ணுயிர் எதிரிகளின் வகுப்பை உடைக்கும் நொதியை பாதுகாப்பாக உற்பத்தி செய்ய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
Netflix: புதிய பட்டன் வந்தாச்சு… இனி பிடிச்சத தான் நெட்ஃபிளிக்ஸ்ல பார்ப்பீங்க
ஆம்பிசிலின், அமோக்ஸிசிலின் மற்றும் பிற பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள் இதில் அடங்கும். கடந்த இரண்டு தசாப்தங்களாக, மனித குடலில் உள்ள நுண்ணுயிரிகள் வளர்சிதை மாற்றத்தில் மட்டுமல்ல, நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil