Advertisment

சந்திரயான்-3 பற்றி புதிய தகவல்: விண்கலம் நிலவில் எவ்வளவு நாட்கள் ஆய்வு செய்யும்?

Chandrayaan-3 mission: சந்திரயான்-3 விண்கலம் அடுத்த மாதம் நிலவிற்கு ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ISROs Chandrayaan-3 spacecraft reaches Sriharikota spaceport for July launch

சந்திராயன் 3 விண்கலம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்புவதற்கான இறுதி கட்டப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இது சந்திரயான்-2 திட்டத்தின் தொடர்ச்சியாகும். தற்போது, ​​சந்திரயான்-3 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி எம்.கே-III ராக்கெட்டுடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

Advertisment

இருப்பினும் இஸ்ரோ ஏவுதலுக்கான தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் ஜூலை 12-19 தேதிகளுக்குள் விண்கலத்தை ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இஸ்ரோவின் கனவு திட்டங்களில் ஒன்றான சந்திரயான்-3 விண்கலம் அடுத்த மாதம் நிலவுக்கு ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வளவு நாட்கள் ஆய்வு?

இஸ்ரோவின் கூற்றுப்படி, சந்திரயான் -3 லேண்டர் மற்றும் ரோவர் சந்திரனின் பகல் நேரத்தில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தோராயமாக பூமியின் நாட்கள்படி 14 செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 விண்கலம் 14 நாட்கள் நிலவில் ஆய்வு செய்யும் படி வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இந்த பணி காலம் அதிகரிக்கவும் சாத்தியம் உள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment