அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியை ஏப்ரல் 24, 1990-ம் ஆண்டு விண்வெளி ஆய்வுக்காக ஏவப்பட்டது. அந்த வகையில் இந்தாண்டோடு ஹப்பிள் தொலைநோக்கி 33 ஆண்டுகள் வெற்றிகரமாக விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதைக் கொண்டாடும் வகையில் ஹப்பிள் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்டு நாசா கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
NGC 1333 என்பது பெர்சியஸ் மூலக்கூறு மேகத்தில் 960 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு நெபுலா ஆகும். சுவாரஸ்யமாக, வாழ்க்கையின் கட்டுமானத் தொகுதிகளாகக் கருதப்படும் மூலக்கூறுகள் சமீபத்தில் அதே மூலக்கூறு மேகத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
நாசாவின் கூற்றுப்படி, ஹப்பிளின் வண்ணமயமான காட்சியானது ஒளிரும் வாயுக்கள் மற்றும் தூசிகளின் உருகும் பாத்திரத்தை வெளிப்படுத்துகிறது. இது தூசியின் கருமேகங்களில் பதிக்கப்பட்ட பல புதிதாக உருவாகும் நட்சத்திரங்களால் கிளறி வீசப்படுகிறது. பிரபஞ்சத்தின் இந்த பகுதியை ஒரு விண்மீன் நாற்றங்கால் என்று கருதலாம், ஏனெனில் அங்கு நடக்கும் நட்சத்திர உருவாக்கம் இதற்கு காரணமாகும்.
இந்நிலையில் ஹப்பிள் தொலைநோக்கியின் 33-வது ஆண்டை கொண்டாடும் வகையில் நட்சத்திரம் உருவாகும் இடத்தை படம் எடுத்த ஹப்பினின் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“