வியாழன் போன்ற ஒரு கிரகம் உருவாகி வருவதை விண்வெளி தொலைநோக்கி மூலம் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அந்த தொலைநோக்கி வாயிலாக புகைப்படத்தையும் எடுத்துள்ளனர். தீவிரமாக இந்த கிரகம் உருவாகி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
இதுவொரு ராட்சத கிரக உருவாக்கம் ஆகும். அதன் வட்டு அடர்த்தியாகவும், குளிர்ச்சியாகவும் மாற வாய்ப்புள்ளது என்று வானியல் தொடர்பான என்சைக்ளோபீடியா தெரிவிக்கிறது.
ஒரு புரோட்டோபிளானட்டரி அல்லது சூழ்நிலை வட்டு என்பது புதிதாக உருவான நட்சத்திரத்தை சுற்றி வரும் வாயு மற்றும் தூசியின் வட்டு ஆகும். அதில் இருந்து கோள்கள் உருவாகும் என்று அனுமானிக்கப்படுகிறது.
WhatsApp: ஒன்பிளஸ், ரியல்மி யூசரா நீங்க? இந்த ட்ரிக் தெரிஞ்சா டெலிட் செய்த மெசேஜை ஈஸியா படிக்கலாம்
டிஸ்க் இன்ஸ்டெபிலிட்டி கோட்பாட்டின் படி, தூசித் துகள்கள் சென்டிமீட்டர் அளவிலான கூழாங்கற்களாக வளர்வதால், இந்த வட்டில் பொருள் மெதுவாக உள்நோக்கி நகர்கிறது. இது ஒரு கிலோமீட்டர் அளவிலான கோள்களை உருவாக்குவதற்கான முதல் படியாகக் கருதப்படுகிறது, அவை இறுதியில் ஒன்றிணைந்து கோள்களை உருவாக்குகின்றன.
புதிதாக உருவாகும் கிரகம் AB Aurigae b என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது சுமார் 2 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இது வியாழனை விட ஒன்பது மடங்கு பெரியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இயற்கை புத்திசாலி; இது பல்வேறு வழிகளில் கிரகங்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil