Advertisment

இப்படி ஒரு ஆய்வா? நம்மை கடிக்கும் கொசுக்களைப் பழிவாங்க முடியுமாம்.. எப்படி தெரியுமா?

கொசுவின் விந்தணுக்களை செயலிழக்கச் செய்வதன் மூலம் அதை நாம் பழிவாங்க முடியும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது,

author-image
WebDesk
New Update
Culex-mosquito-20230317

Culex-mosquito

மனிதர்களை அதிகம் கொல்லும் ஒரே விலங்கு கொசுக்கள் தான். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கொசுக்களால் பரவும் நோய்கள் ஆண்டுதோறும் 7 லட்சம் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளது. இந்நிலையில் கலிபோர்னியா பல்கலைக்கழகம், ரிவர்சைடு, (யுசிஆர்) நடத்திய ஆய்வின்படி, கொசுகளின் விந்தணுக்களை செயலிழக்கச் செய்வதன் மூலம் நாம் அதைப் பழிவாங்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

Advertisment

PLOS ONE இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியில், Culex வகை கொசுவின் விந்தணுவில் உள்ள அனைத்து புரதங்கள் குறித்தும்

ஆராய்ச்சியாளர்கள் விவரித்துள்ளனர். இந்த வகை கொசு brain-swelling encephalitis, West Nile River virus போன்ற நோய்களைப் பரப்புகிறது. இந்த ஆராய்ச்சி கூறுகையில், கொசுக்களின் விந்தணுக்களை செயல்படுத்துவதற்கு காரணமான புரதங்களை செயலிழக்கச் செய்யவதன் மூலம் கருவுறுவதை தடுக்கிறது.

இனப் பெருக்கத்தின் போது கொசுக்கள் தங்களது வால் கொண்டு ஜோடியாகின்றன. ஆண் கொசு விந்தணுவை பெண் இனப்பெருக்க பகுதியில் மாற்றுகிறது. இந்த முட்டைகளை சிறிது நேரம் அங்கேயே சேமித்து வைக்கலாம், ஆனால் கருவுறுதலை முடிக்க பாயிண்ட் A to பாயிண்ட் B-க்கு செல்கிறது என்று ஆய்வின் முதன்மை ஆசிரியரான Cathy Thaler கூறினார்.

விந்து வெளியேறும் போது சுரக்கப்படும் ஒரு சிறப்பு புரதம் விந்தணுவின் "ஃபிளாஜெல்லா" அல்லது வால்களை செயல்படுத்துகிறது.

இது முட்டைகளை உருவாக்க உதவுகிறது. ஆய்வின் மற்றொரு ஆசிரியரான ரிச்சர்ட் கார்டுல்லோவின் கூற்றுப்படி, விந்தணுக்கள்

அந்த புரதங்கள் இல்லாமல் முட்டைகளை ஊடுருவ செய்ய முடியாது. அதாவது அவை நகராது. இறுதியில் அவை சிதைந்து கரைந்துவிடும் என்று கூறினார்.

கொசுவின் விந்தணு

நீங்கள் கற்பனை செய்வது போல், கொசுக்களின் விந்தணுவைப் படிப்பது எளிதானது அல்ல. ஆராய்ச்சிக் குழு முதலில் 200 ஆண் கொசுக்களை அதன் பெரிய இனத் தொகையிலிருந்து தனிமைப்படுத்தி எடுத்தது. அதன்பிறகு, மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி கருவி மூலம் இனப்பெருக்க பகுதியில் உள்ள விந்தணுவை எடுத்து அதனுள்ள இருந்த புரதங்களைக் கண்டறிந்து ஆய்வு செய்தனர்.

A more environment-friendly method to stop mosquitos

கொசுவின் விந்தணுக்களை எடுத்து ஆய்வு மேற்கொள்வதற்கான காரணம் ஆராய்ச்சியில் செய்யப்படும் புரோட்டீன் விவரக்குறிப்பு சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் கொசு உற்பத்தியை தடுப்பதற்கான வழிமுறையாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Research Fever
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment