சூரிய உதயம், சூரியன் மறைவை ரசிக்காதவர்கள் இங்கு உண்டோ? கன்னியாகுமரியில் நாள்தோறும் சூரிய உதயத்தை காண ஏராளாமானோர் கடற்கரையில் குவிந்திருப்பர். தக தகவென சூரியன் கடலில் இருந்து எழுவது போன்ற காட்சிகளை நேரடியாக காண ஆவல் கொள்வோம். அந்த காட்சிகளை நமது செல்போன்களில் படம் எடுக்க ஆசை கொள்வோம். ஆனால் நாம் ஏன் சூரிய உதயத்தை ரசிக்கிறோம் என்று நினைத்திருக்கிறோமா? ஆனால் ஆய்வாளர்கள் அதுகுறித்து ஆய்வு செய்துள்ளனர்.
சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதயம் போன்ற "எபிமரல் நிகழ்வுகள்" மக்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, மன ஆரோக்கியம் மற்றும் இயற்கை குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமைதியான நீல வானத்தின் கீழ் இந்த தாக்கத்தை மதிப்பீடு செய்துள்ளன.
எபிமரல் நிகழ்வுகள்
வானிலை மற்றும் சூரியனின் தினசரி தாளங்களின் மாறுபாடுகளுக்கு மனிதர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவை "எபிமரல் நிகழ்வுகள்" என்று குறிப்பிடப்படுகின்றன. இயற்கை மற்றும் நகர்ப்புற சூழல் கொண்ட நிகழ்வுகள் தொடர்பான படங்கள் 2,500 க்கும் மேற்பட்ட நபர்களிடம் காண்பிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. கணினி கிராபிக்ஸ் மூலம் காண்பிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் போன்ற நிகழ்வுகள் மற்றத்தை விட கணிசமாக மிகவும் அழகாக இருப்பதைக் கண்டறிந்தனர்.
பாசிடிவ் எனர்ஜி
மேலும், இவை பிரமிப்பைத் தூண்டியது எனவும் கூறியுள்ளனர். இந்த நிகழ்வுகள் உணர்ச்சியை தூண்டுவதாகவும், மனநிலையை மேம்படுத்துவதாகவும், பாசிடிவ் உணர்ச்சிகளை அதிகரிப்பதற்கும், ஆற்றல் கொண்டிருப்பதாகவும் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் தவிர, வானவில், மழைப் புயல்கள், நட்சத்திரங்கள் போன்ற அரிய நிகழ்வுகளும் காண்பிக்கப்பட்டது. ஆனால் இவைகள் ஒருவருக்கொருவர் வேறுபட்ட கருத்து கொண்டுள்ளது. வெவ்வேறு நிலப்பரப்புகளில் அழகையும் பிரமிப்பையும் அனுபவித்த அளவை மாற்றுகிறது என ஆய்வு கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“