இந்திய விஞ்ஞானி தலைமையிலான குழு வியாழன் அளவிலான கிரகத்தை சூழ்ந்திருக்கும் நட்சத்திரம் அதை விழுங்குவதை கண்டதாக கூறியுள்ளனர். நமது விண்மீன் மண்டலத்தில் நட்சத்திரம் ஒரு கிரகத்தை விழுங்குவதை விஞ்ஞானிகள் கண்டனர். பூமியிலிருந்து சுமார் 12,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கழுகு போன்ற விண்மீன் கூட்டமான அக்விலாவிற்கு அருகில் இந்த கிரக விருந்து நடந்ததாக நம்பப்படுகிறது.
சூரியனைப் போன்ற நட்சத்திரம், ZTF SLRN-2020 என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரம் வியாழன் அளவிலான கிரகத்தை விழுங்கியதாக கூறப்பட்டுள்ளது.
கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி), ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் குழு இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். மே 2020-ல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து ஒரு கிரகத்தின் மரணத்தை உறுதிப்படுத்தியது.
நட்சத்திரங்களின் வாழ்க்கைச் சுழற்சிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பழைய நட்சத்திரங்கள், இறுதியில் அருகிலுள்ள கிரகங்களான புதன், வீனஸ் போன்றவற்றை உட்கொள்ளக் கூடும் எனவும் அறிவியல் ரீதியாக அறியப்படுகிறது.
“ஆனால் ஒரு கிரகத்தின் மரணத்தை நிரூபிக்கும் சோதனை ஆதாரங்களை வழங்குவது மிகவும் சவாலானதாகக் கருதப்பட்டது” என்று நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் முதன்மை ஆசிரியர் கிஷாலே டி, தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
இன்று முதல் ஐந்து பில்லியன் ஆண்டுகளில் பூமியும் இதேபோன்ற நிலையை எதிர்கொள்ளக்கூடும் என்று டி கூறினார்.
அவர் கூறுகையில், அதன் வாழ்நாளின் முடிவில், சூரியன் பூமியின் இன்றைய சுற்றுப்பாதையை விட நிச்சயமாக பெரியதாக இருக்கும். எனவே பெயரளவில், சுமார் 5 பில்லியன் ஆண்டுகளில் சூரியனின் எரிபொருள் தீர்ந்துவிடும் போது பூமி மூழ்கிவிடும் என்றார். கிஷாலே டி பால்வீதி மற்றும் பிற விண்மீன் திரள்களில் ஏற்படும் பேரழிவு வெடிப்புகளுக்கு காரணமான நிலையற்ற ஆப்டிகல் அல்லது அகச்சிவப்பு குறித்தான ஆய்வை எம்.ஐ.டியில் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஒரு வாரம் முன்பு ஸ்விக்கி ட்ரான்சியன்ட் ஃபேசிலிட்டி (ZTF) மூலம் தரவுகளை ஸ்கேன் செய்யும் போது, விவரிக்க முடியாத பிரகாசமான நெருப்பு பொறியை கவனித்துள்ளார். மேலும் சூடான வாயுவின் தோற்றம், அது ஒரு நோவாவைப் பின்தொடரும் பட்சத்தில், அதுவும் இல்லாமல் இருந்தது. இது குழப்பத்தை ஏற்படுத்தியது. பொதுவாக, நட்சத்திரங்கள் பிரகாசமாகும்போது, அதற்கேற்ப அவை வெப்பமாகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“