சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் ஆதித்யா-எல்1 இந்தாண்டு செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதித்யா-எல்1 இந்தியாவின் முதல் சூரிய திட்டமாகும்.
Advertisment
கடந்த ஜூலை மாதம் சந்திரயான்-3 உட்பட இரண்டு வெற்றிகரமான பயணங்களுக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் அடுத்த பெரிய பயணத்திற்கு தயாராகி வருகிறது - சூரிய திட்டத்திற்கு தயாராகி வருகிறது.
விண்கலம் இல்லை ஆய்வகம்
நேற்று இஸ்ரோ வெளியிட்ட ட்விட் பதிவில், “சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி அடிப்படையிலான இந்திய ஆய்வகமான (space-based Indian observatory) ஆதித்யா-எல்1 ஏவுவதற்கு தயாராகி வருகிறது. பெங்களூருவில் உள்ள யு.ஆர் ராவ் செயற்கைக் கோள் மையத்தில் (யு.ஆர்.எஸ்.சி) உருவாக்கப்பட்ட செயற்கைக் கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள எஸ்.டி.எஸ்சி- எஸ்.ஹெச்.ஏ.ஆர் தளத்திற்கு வந்தடைந்தது” என்று தெரிவித்துள்ளது.
தற்போதைய சந்திரயான்-3 திட்டத்தைப் போலவே, செயற்கைக் கோள் பூமியைச் சுற்றி வரும் வேகத்தில் சூரியனை நோக்கிச் செல்லும். 4 மாதத்தில் அது 1.5 மில்லியன் கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்ளும். மேலும், அது L1 புள்ளியைச் சுற்றி உள்ள Halo-shaped orbit-ல் நுழைக்கப்படும்.
சூரிய பயணத்தில் விண்கலம் சூரியனுக்குச் செல்லாது. அதற்குப் பதிலாக கிரகணத்தின் போதும் கூட சூரியனைக் காணக்கூடிய வகையில் ஒரு விண்வெளி ஆய்வகம் அனுப்பபடும்.
சூரியனில் இருந்து தடையற்ற, தொடர்ச்சியான தகவல்களைப் பெற செயற்கைக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள L1 லாக்ரேஞ்ச் (Lagrange) புள்ளிக்கு பயணிக்கும். லாக்ரேஞ்ச் புள்ளிகள் - ஏதேனும் இரண்டு வானப் பொருட்களுக்கு இடையில் ஐந்து உள்ளன - விண்வெளியில் வாகன நிறுத்துமிடங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil