அப்துல் கலாம் செயற்கைக் கோள்கள் திட்டம்: செங்கல்பட்டில் இருந்து ஏவப்பட்டது

APJ Abdul Kalam Mission 2023: நாட்டில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உருவாக்கிய 150 PICO செயற்கைக்கோள்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பட்டிபோலம் கிராமத்தில் இருந்து ஏவப்பட்டது.

அப்துல் கலாம் செயற்கைக் கோள்கள் திட்டம்: செங்கல்பட்டில் இருந்து ஏவப்பட்டது

மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் நிறுவனம் இணைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏ.பி.ஜே அப்துல் கலாம் செயற்கைக்கோள் 2023 திட்டத்தை செங்கல்பட்டு மாவட்டம் பட்டிபோலம் கிராமத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான 5,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து 150 PICO செயற்கைக் கோள்களை உருவாக்கினர். டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் செயற்கைக் கோள்கள் ஏவதல் திட்டம் 2023-ன் ஒரு பகுதியாக இந்த செயற்கைக் கோள்கள் ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

இந்த திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பற்றி மேலும் அறிய வாய்ப்பளித்துள்ளது. இந்த திட்டத்தில் 85 சதவீத நிதியுதவியை தமிழ்நாட்டில் உள்ள மார்ட்டின் அறக்கட்டளை, தன்னார்வ தொண்டு நிறுவனம் அளித்துள்ளது. இந்த ராக்கெட் இந்தியாவின் முதல் ஹைபிரிட் வகை ராக்கெட் ஆகும்.

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Indias first hybrid rocket launched from tn

Exit mobile version