இந்தியாவில் முதல் முறையாக தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் 'விக்ரம்-எஸ்' (Vikram-S) நவம்பர் 12-16 இடையில் விண்வெளிக்கு செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஸ்கைரூட் (Skyroot)என்ற நிறுவனம் ராக்கெட் தயாரித்துள்ளது.
விண்வெளியில் தனியார் துறை ஏவுதல் தொடங்கும் வகையில் இந்த ராக்கெட் செலுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு 'பிரரம்ப்' (Prarambh) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஸ்கைரூட் நிறுவனத்தின் விக்ரம்-எஸ் ராக்கெட் 3 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து நவம்பர் 12-16 இடையில் ஏவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கைரூட் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாக பரத் டாகா கூறுகையில், "வானிலை நிலையைப் பொறுத்து ராக்கெட் ஏவுதல் முடிவு செய்யப்படும். விக்ரம்-எஸ் single stage sub-orbital ராக்கெட்டாகும். 3 கஸ்டமர் பேலோடுகளை சுமந்து செல்கிறது. இது அடுத்தடுத்து ஏவப்பட உள்ள விக்ரம் சீரிஸ் ராக்கெட்களின் தொழில்நுட்பங்களை சோதிக்கவும் சரிபார்க்கவும் உதவும்" என்று கூறினார்.
மேலும், 3 விக்ரம் ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில், பல்வேறு திட மற்றும் கிரையோஜெனிக் எரிபொருட்கள் பயன்படுத்தி 290 கிலோ முதல் 560 கிலோ வரையிலான பேலோடுகளை sun-synchronous துருவ சுற்றுப்பாதையில் கொண்டு செல்ல தயாரிக்கப்படுகிறது" என்றார்.
ஸ்கைரூட் நிறுவனத்தின் சி.இ.ஓ பவன் குமார் சந்த்னா கூறுகையில், " இஸ்ரோ, இன்-ஸ்பேஸ் மற்றும் தொழில்நுட்பத் திறமை ஆகியவற்றால் விக்ரம்-எஸ் ராக்கெட் இவ்வளவு குறுகிய காலத்தில் உருவாக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் மற்றும் தொலைநோக்கு கொள்ளை தனியார் விண்வெளித் துறையிக்கு பெரிதும் உதவியாக உள்ளது" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“