இமாலயன் சந்திர தொலைநோக்கியைப் பயன்படுத்தி C/2022 E3 (ZTF) என்ற வால் நட்சத்திரத்தை வானியலாளர்களால் படம் எடுத்தனர். பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் இருந்து இயக்கப்பட்டு எடுக்கப்பட்டது.
லடாக்கின் ஹன்லேவில் உள்ள சரஸ்வதி மலையின் அடிவாரத்தில் ஹிமாலயன் சந்திரா தொலைநோக்கி பயன்படுத்தி எடுக்கப்பட்டது. சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு மேலே வானத்திற்கு கடைசியாக வந்த புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வால் நட்சத்திரத்தை படம் எடுத்தனர். நியாண்டர்தல் காலத்தில் இருந்து அந்த நட்சத்திரம் இருந்துள்ளது.
வால் நட்சத்திரம் C/2022 E3 (ZTF) ஹிமாலயன் சந்திரா தொலைநோக்கிப் பயன்படுத்தி வானியலாளர்களால் எடுக்கப்பட்டுள்ளது. இது பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனத்தால் (IIA) இயக்கப்படுகிறது. வால் நட்சத்திரம் தற்போது சூரியனை நோக்கி செல்லும் வழியில் வரும் ஜனவரி 12-ம் தேதி (நாளை) சுற்றுப்பாதையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி மாத தொடக்கத்தில் பூமிக்கு மேலே உள்ள வானத்தில் வால் நட்சத்திரம் தெரியும் என்றும், அதிக அளவில் ஒளிரும் பட்சத்தில் வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்றும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.
“இந்த வால் நட்சத்திரம் ஜனவரி 12 அன்று சூரியனுக்கு மிக அருகில் கடந்து செல்லும் மற்றும் பிப்ரவரி தொடக்கத்தில் வெறும் கண்களால் பார்க்க முடியும். 50,000 ஆண்டுகளுக்குப் பிறகு வால் நட்சத்திரம் வருவதால் இது மிகவும் அரிதான செயல்” என்று இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ட்விட் செய்துள்ளது.
வால்நட்சத்திரத்தை தனித் தனி படங்களாக சிவப்பு, பச்சை மற்றும் நீல ஃபில்டர்கள் கொண்டு படம் எடுக்கப்பட்டு அவை ஒன்றிணைக்கப்பட்டது. வானியலாளர்களான மார்கரிட்டா சஃபோனோவா, முல்சந்த் குர்ரே & பாரத் சந்திரா ஆகியோர் இதைப் படம் எடுத்தனர்.
வால் நட்சத்திரம் அழுக்கு பனிப்பந்துகள் (dirty snowballs) என்று குறிப்பிடப்படுகிறது. நமது சூரிய குடும்பத்தின் உருவாக்கம் பற்றிய முக்கிய தடயங்களை வழங்கக்கூடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/