இந்தோனேசியாவில் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இணைய சேவை கிடைக்கும் வகையில் ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைந்து மிகப்பெரிய தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை ஏவியது. 4.5-டன் எடை கொண்ட SATRIA-1 செயற்கைக்கோள் ஸ்பேஸ்எக்ஸின் பால்கன் 9 ராக்கெட் மூலம் சுற்றுப்பாதைக்கு நேற்று (திங்கட்கிழமை) வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸின் புளோரிடா விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்பட்டது.
இந்தோனேசியாவின் 280 மில்லியன் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஏற்கனவே இணைய சேவை பெற்றுள்ளனர். ஆனால் தென்கிழக்கு ஆசிய நாட்டின் தொலைதூர, வளர்ச்சியடையாத கிழக்குத் தீவுகளில் இணைய தொடர்பு குறைவாகவே உள்ளது. இதையடுத்து 540 மில்லியன் டாலர் மதிப்பில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இந்தோனேசிய மூத்த அமைச்சர் Mahfud MD கூறுகையில், அடுத்த 10 ஆண்டுகளில் ஃபைபர் ஆப்டிக்ஸ் மூலம் இணையம் பெற
முடியாத கிராமங்களுக்காக இந்த செயற்கைக் கோள் தொழில்நுட்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
இந்தோனேசியாவின் கிழக்கு பப்புவா பகுதிக்கு மேலே உள்ள பகுதிகளுக்கு இணைய சேவை வழங்கும். இது வினாடிக்கு 150 ஜிகாபைட் திறன் கொண்டது மற்றும் 50,000 பொது சேவை மையங்களுக்கு இணைய அணுகலை வழங்கும் என்று இந்தோனேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“