நாசாவின் ஜெட் ப்ரோபல்ஷன் ஆய்வகத்தின் (ஜேபிஎல்) விஞ்ஞானிகள், தொடர்பு துண்டிக்கப்பட்ட 63 நாட்களுக்கு பிறகு இன்ஜெனுட்டி மார்ஸ் ஹெலிகாப்டருடன் மீண்டும் தொடர்பு கொண்டதாக அறிவித்தனர். ஜூன் 28 அன்று மீண்டும் சிக்னல் கிடைத்தாக கூறினர்.
இன்ஜெனுட்டி மார்ஸ் ஹெலிகாப்டர் ரோட்டார் கிராஃப்ட் உடனான தொடர்பை கடந்த 2 மாதங்களுக்கு முன் இழந்தது. இன்ஜெனுட்டி என்பது சூரிய சக்தியில் இயங்கும் சிறிய ஹெலிகாப்டர் ஆகும், இது பிப்ரவரி 18, 2021 அன்று செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பெர்செவரன்ஸ் ரோவருடன் தரையிறங்கியது. அதே ஆண்டு ஏப்ரல் 19 அன்று, மனித வரலாற்றில் முதல் ஆற்றல் கொண்ட வேற்று கிரக விமானத்தை செய்து வரலாற்றை உருவாக்கியது.
Ingenuity இன் 52 வது விமானம் ஏப்ரல் 26 அன்று அனுப்பபட்டது. ஆனால் நாசா மிஷன் கன்ட்ரோலர்கள் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக மேற்பரப்பு நோக்கி இறங்கியபோது அதனுடனான தொடர்பை இழந்தது, அதாவது விமானம் வெற்றிகரமாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த அவர்களுக்கு வழி இல்லை.
பின்னர் அதனுடன் தொடர்பு கொள்ள நாசா முயற்சி செய்தது. இந்நிலையில் 63 நாட்களுக்குப் பிறகு இன்ஜெனுட்டி மார்ஸ் ஹெலிகாப்டர் நாசாவுடன் மீண்டும் சிக்னல் கொடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“