ISRO Aditya L1 Sun Mission Launched: சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் ஆதித்யா எல்.1 விண்கலம் இன்று (செப்டம்பர் 2) காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்.1 விண்கலம் அனுப்பபட்டது. இது இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு திட்டமாகும்.
சந்திரயான் -3 வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யவதற்கான ஆதித்யா எல்.1 விண்கலம் இன்று ஏவப்பட்டது. இந்த விண்கலம் சூரியனின் எல்.1 புள்ளியில் இருந்து ஆய்வு மேற்கொள்ளும். இன்று ஏவப்பட்ட விண்கலம் 4 மாத பயணங்களுக்குப் பிறகு எல்.1 புள்ளியை அடைந்து ஆய்வு செய்யும்.
எதற்காக ஆய்வு?
ஆதித்யா எல்.1 விண்கலம் 7 பேலோடுகளை சுமந்து செல்கிறது. இது போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் மற்றும் சூரியனின் வெளிப்புற அடுக்குகளை எலக்ரோமேக்னடிக், துகள் மற்றும் காந்தப்புல கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி கண்டுபிடிக்க அனுப்பபடுகிறது.
சூரிய எரிப்பு, கொரோனல் மாஸ் எஜெக்ஷன் அல்லது பூமியை நோக்கி செலுத்தப்படும் சூரியக் காற்று போன்றவற்றால் பூமிக்கு ஏற்படும் ஆபத்துகளை கண்டறிவதற்கு இந்த திட்டம் மிக முக்கியமானது என இஸ்ரோ கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“