இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் செமி-க்ரியோஜெனிக் ஒருங்கிணைந்த இயந்திரம் மற்றும் நிலை என்ற புதிய நிலையத்தை தொடங்கி உள்ளது. இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை இங்கு செமி-க்ரியோஜெனிக் என்ஜின் சோதனை தொடங்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் ப்ராபல்ஷன் வளாகத்தில் (ஐபிஆர்சி) இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி உந்துதல் அறையைத் தவிர அனைத்து என்ஜின் அமைப்புகளையும் உள்ளடக்கி உள்ளது. குறைந்த அழுத்தம் மற்றும் உயர் அழுத்த டர்போ-பம்ப்கள் உட்பட, உந்துசக்தி ஊட்ட அமைப்பின் வடிவமைப்பை சரிபார்க்க என அனைத்து சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
2000 kN உந்துதல் சக்தி கொண்ட செமி-கிரையோஜெனிக் எஞ்சின், இது எதிர்கால ஏவுகணை வாகனங்களின் முதல்-நிலை பூஸ்டர்களை இயக்கும், இஸ்ரோவின் லிக்விட் ப்ராபல்ஷன் சிஸ்டம்ஸ் சென்டரால் (LPSC) வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது திரவ ஆக்ஸிஜன் (LOX) - கேரோசின் உந்துசக்தி கலவையில் வேலை செய்கிறது.
செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட சோதனை முழுமையான இயந்திரம் மற்றும் அதன் தகுதி ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன் ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது. சோதனையின் போது, பொறியாளர்கள் சுமார் 15 மணிநேரம் குளிரூட்டல் செயல்பாடுகளை மேற்கொண்டனர் மற்றும் இயந்திரம் தொடங்குவதற்கு தேவையான அனைத்து நிபந்தனைகளையும் சோதித்தனர். குளிர்ச்சியைத் தொடர்ந்து, திரவ ஆக்ஸிஜன் (LOX)-கேரோசின் உந்துசக்தி நிரப்பப்பட்டது. பின்னர் எரிவாயு ஜெனரேட்டருக்குள் LOX அனுமதிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“